Published : 15 Oct 2015 08:03 AM
Last Updated : 15 Oct 2015 08:03 AM
மலேசிய நாட்டில் பியூட்டி பார்லர் உரிமையாளரான தமிழரிடம் கொத்தடிமைகளாக சிக்கிய 27 தமிழர்கள், தங்களை மீட்குமாறு ‘வாட்ஸ் அப்’ மூலம் உதவி கோரியுள்ளனர்.
மலேசிய நாட்டிலுள்ள அலோர் செடார் நகரில், ஸ்மார்ட் கய்ஸ் ஹேர் சலூன் வைத்துள்ளவர் குமார். இவரது சலூனுக்கு ஒப்பந்த அடிப்படையில் தமிழகத்தைச் சேர்ந்த 27 பேர் சென்றுள்ளனர். ஒப்பந்தத்தில், முடிதிருத்தும் பணி மட்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் பூக்கடை, இளநீர் கடை, சலூன் என பணியாளர்களை வேலைக்கு அனுப்பியுள்ளார் குமார். மேலும், நாளொன்றுக்கு 14 மணி நேரம் வேலை வாங்கியுள்ளார்.
பாதிக்கப்பட்ட ஒருவர் தனது உறவினருக்கு அனுப் பிய ‘வாட்ஸ் அப்’ குரல் பதிவு மூலம் தெரியவந்ததாவது: “தினமும் 14 மணி நேரம் வேலை வாங்கு கின்றனர். 2 வருடம் பணி பர்மிட் என்று சொன்னார்கள். ஆனால் 3 , 4 வருடம் இருக்க வைக்கின்றனர். நாங்கள், ஊருக்கு செல்ல வேண் டும் என்றால் 5,000 வெள்ளி (இந் திய மதிப்பில் ரூ.80,000) தந்து செல்லுமாறு கட்டாயப்படுத்துகின் றனர். இல்லையென்றால் அடிக்கி றார்கள். கடையில் திருடிவிட்டதாக போலீஸில் பிடித்துக்கொடுப்போம் என்றும் மிரட்டுகின்றனர். கொத்த டிமைகளைப்போல நடத்துகின்ற னர். எனவே, சொந்த நாட்டுக்கு உயிருடன் திரும்பிச்செல்ல உதவ வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு இவர்களில் 20 பேர் தப்பிச் சென்று, அங்குள்ள இந்திய தூதரகத்தில் தஞ்சமடைந்தனர். தூதரக அதிகாரிகள் நாங்கள் விசாரிக்கிறோம். அதுவரை, நீங்கள் வேறு எங்காவது தங்கிகொள்ளுங் கள் எனக் கூறி வெளியே அனுப்பி யுள்ளனர்.
இதையடுத்து, கடை உரிமை யாளர் குமாரிடம் இந்திய தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி யுள்ளனர். அப்போது, “2 வருடம் வரை பணிபுரிந்தவர்களுக்கு மட்டும் விமான டிக்கெட் எடுத்துக் கொடுப்பது வழக்கம். மற்றவர்கள் அவர்களாகவே டிக்கெட் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், அதுவும் 15 நாள் கழித்துதான் முடிவாகும்” என குமார் தெரிவித்தாராம்.
பிழைப்பு தேடி வெளிநாடு வந்து கொத்தடிமைகளாக நடத்தப்படும் தனது நாட்டு மக்களுக்கு உதவ வேண்டிய இந்திய தூதரக அதிகாரிகள், மலேசிய முதலாளிக்கு சார்பாக செயல்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
தூதரகம் கைவிட்டாலும்...
தமிழ்நாடு சமூக சேவை சர்வதேச கழகப் பொதுச் செயலாளர் பட்டுக் கோட்டை ஏ.பிரபாகரன் தெரிவித்த தாவது: எங்களின் ‘வாட்ஸ் அப்’ நண்பர்கள் குழு மூலம் இந்தத் தகவல் தெரிந்தவுடன், மலேசியா வில் தவித்த தமிழக இளைஞர் களை, அங்குள்ள எங்களது உறுப் பினர்களே தங்கள் அறைகளில் தங்க வைத்துள்ளனர். தூதரகத்திடம் பேசி, அவர்களை அழைத்து வருவதற்கான நடவடிக்கையையும் எடுத்து வருகிறோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT