Published : 24 Dec 2020 07:28 AM
Last Updated : 24 Dec 2020 07:28 AM
தனது புதிய கட்சியின் தொடக்க விழாவை மதுரையில் நடத்த நடிகர் ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜனவரியில் கட்சி தொடங்குவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். கட்சி தொடங்கும் தேதி, இடம் குறித்து வரும்
31-ம் தேதி அறிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, புதிய கட்சி தொடங்குவதற்கான பணிகளில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்
தல் ஆணையத்தில் கட்சியின் பெயரை பதிவு செய்வது, பொது சின்னம் வாங்குவது உள்ளிட்ட பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில், கட்சி தொடக்க விழா பொதுக்கூட்டத்தை எங்கு, எப்போது நடத்துவது என்று கட்சியின் மேற்பார்வையாளர் தமிழருவி மணியன், தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனமூர்த்தி மற்றும் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களுடன் ரஜினி ஆலோசனை நடத்தியுள்ளார்.
தொடக்கவிழா பொதுக்கூட்டம்
கட்சி தொடக்க விழாவுக்காக சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி ஆகிய நகரங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவ
தாகவும் கூறப்பட்டது. தற்போது தனக்கு அதிக ரசிகர்கள் உள்ள மதுரையில் கட்சி தொடக்க விழா பொதுக்கூட்டத்தை நடத்தி, அதில் கட்சியின் பெயர், சின்னம், தேர்தல் பிரச்சார பயண திட்டம், கட்சியின் கொள்கை ஆகியவற்றை ரஜினிகாந்த் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவரது ரசிகர்களும், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் உற்சாகத்துடன் களமிறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
தென் மாவட்டங்களுக்கும், வட மாவட்டங்களுக்கும் பொதுவானஇடமாகவும் மதுரை கருதப்படுகிறது. அதனால், மதுரையில் கட்சியை அறிவிக்க ரஜினிகாந்த் விரும்புவதால், அங்கு எந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்தலாம் என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆலோசிப்பதுடன், அதற்கான முன்னேற்பாடுகளிலும் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.
தமிழக சட்டப்பேரவைக்கு மார்ச் மாதத்திலேயே தேர்தல் நடக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதனால், பொங்கலுக்கு பிறகு அதாவது, ஜனவரி 3-வதுவாரத்துக்குள் கட்சியைத் தொடங்கி, அங்கேயே தேர்தல்பிரச்சாரத்தையும் ஆரம்பிப்பது என்று ரஜினி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT