Published : 22 Dec 2020 01:46 PM
Last Updated : 22 Dec 2020 01:46 PM
தமிழக அரசு அலுவலகங்களில் தற்காலிகமாகப் பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசு அலுவலகங்களில் தற்காலிக ஊழியர்களாகப் பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகள், தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கடந்த 8 ஆண்டுகளாகத் தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அவர்கள் வலியுறுத்தி மனுவும் அளித்துள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (டிச. 22) தன் ட்விட்டர் பக்கத்தில், "தமிழக அரசு அலுவலகங்களில், தற்காலிக ஊழியர்களாக 8 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகள், நீண்ட நாட்களாகப் பணி நிரந்தரம் கோரி போராடி வருகிறார்கள்.
கடவுளின் குழந்தைகளான அவர்களிடமும் ஆதாயமடைவது பற்றி ஆட்சியாளர்கள் யோசிக்காமல், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதைக் கடமையாகக் கருத வேண்டும். மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு அலுவலகங்களில், தற்காலிக ஊழியர்களாக 8 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகள், நீண்ட நாட்களாக பணி நிரந்தரம் கோரி போராடி வருகிறார்கள்.1/2
— TTV Dhinakaran (@TTVDhinakaran) December 22, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT