Published : 19 Dec 2020 03:14 AM
Last Updated : 19 Dec 2020 03:14 AM

சத்தியமங்கலத்தில் வனவிலங்கு கணக்கெடுப்பின்போது விபரீதம்: வனப்பகுதியில் யானை தாக்கியதில் வனக்காவலர் உட்பட 2 பேர் உயிரிழப்பு

ஈரோடு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட விளாமுண்டி வனப்பகுதியில், விலங்குகள் கணக்கெடுப்பு பணிக்குச் சென்ற வனக்காவலர் உள்ளிட்ட இருவர்,யானை தாக்கி உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட 10 வனச்சரகங்களில், நேற்று முன்தினம் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கியது. விளாமுண்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட சிங்கமலை வனப்பகுதியில் கணக்கெடுப்பில் ஈடுபட்டுவந்த குழுவினரை, ஒரு யானை திடீரென துரத்தியுள்ளது.

வனக்காப்பாளர் பொன் கணேசனை முதலில் யானை தாக்கியது. அவரைக் காப்பாற்ற முயன்ற வனக்காவலர் சதீஷை (21) யானை தூக்கி வீசியது.இதில் சதீஷ் சம்பவ இடத்தி லேயே இறந்தார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தன்னார்வலர் பிரபாகர சேரபாண்டியன் (27)அருகே உள்ள மரத்தில் ஏறி உயிர்தப்ப முயன்றார். ஆனால், அவரை யும் யானை மிதித்துக் கொன்றது.

இந்த தாக்குதலில் இருந்துஉயிர் தப்பிய வனக்காப்பாளர் பொன் கணேசன் கொடுத்த தகவலின் அடிப் படையில், வனத்துறையினர் சதீஷ் மற்றும் பிரபாகர சேரபாண்டியனின் உடல்களை மீட்டு, சத்தியமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை அடுத்து வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x