Published : 17 Dec 2020 02:23 PM
Last Updated : 17 Dec 2020 02:23 PM
புதுச்சேரியில் இன்று புதிதாக 40 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 307 ஆக உள்ளது.
இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (டிச. 17) தெரிவித்திருப்பதாவது:
"புதுச்சேரி மாநிலத்தில் 3,144 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி-21, காரைக்கால்-5, ஏனாம்-1, மாஹே-13 என மொத்தம் 40 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், இன்றைய தினம் உயிரிழப்பு ஏற்படவில்லை. இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 622 ஆகவும், இறப்பு விகிதம் 1.65 சதவீதமாகவும் உள்ளது.
இதுவரை புதுச்சேரி மாநிலத்தில் 37 ஆயிரத்து 622 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் தற்போது மருத்துவமனைகளில் 204 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 103 பேரும் என 307 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று புதுச்சேரியில் 19 பேர், மாஹேவில் 13 பேர் என 32 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 693 (97.53 சதவீதம்) ஆக உள்ளது.
இதுவரை 4 லட்சத்து 44 ஆயிரத்து 444 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், 4 லட்சத்து 2,434 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது".
இவ்வாறு மோகன்குமார் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT