Published : 17 Dec 2020 03:16 AM
Last Updated : 17 Dec 2020 03:16 AM
‘புரெவி’ புயல் மற்றும் கனமழை யால், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் 2 லட்சத்து51 ஆயிரத்து 92 ஹெக்டேர் நெற்பயிர்கள் முழுவதும் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன என்று வேளாண் துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் ‘புரெவி’ புயலால் கனமழை பெய்தபோது பல மாவட்டங்களில் விவசாய விளை பொருட்கள் நீரில் மூழ்கின. இதையடுத்து அவற்றைக் கணக்கிடும் பணியை வேளாண் அதிகாரிகள் மேற்கொண்டனர். முதல்வர் பழனி சாமியும் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார்.
இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:
‘புரெவி’ புயலால் 24 மாவட்டங்களில் விவசாய விளைபொருட்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. டிச.14-ம்தேதி வரை நடத்தப்பட்ட ஆய்வின்படி, மொத்தம் 3 லட்சத்து 5 ஆயிரத்து 294 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த விவசாய விளைபொருட்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன.
மேலும், 2 லட்சத்து 51 ஆயிரத்து92 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள், 21 ஆயிரத்து 393 ஹெக்டேரில் தினை வகைகள்,3 ஆயிரத்து 948 ஹெக்டேரில் எண்ணெய் வித்துக்கள், 16 ஆயிரத்து 446 ஹெக்டேரில் பருப்பு வகைகள், 56 ஹெக்டேரில் கரும்பு, 12 ஆயிரத்து 359 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி ஆகியன நீரில் மூழ்கி முழுவதும் சேத மடைந்துள்ளன.
நெற் பயிரைப் பொருத்தவரை அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 623 ஹெக்டேரிலும், நாகப்பட்டினத்தில் 80 ஆயிரத்து 983 ஹெக் டேரிலும், கடலூரில் 44 ஆயிரத்து 407 ஹெக்டேரிலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 729 ஹெக்டேரிலும் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமடைந் துள்ளன.
மேலும், 2 லட்சத்து 36 ஆயிரத்து68 ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் உட்பட 2 லட்சத்து63 ஆயிரத்து 843 ஹெக்டேரில்பயிரிடப்பட்டுள்ள விளைபொருட் கள் 33 சதவீதத்துக்கும் மேல் மழைநீரில் சேதமடைந்துள்ளன. இந்தத் தகவல் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. விரை வில் மத்திய குழு தமிழகம் வந்து‘புரெவி’ புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிடும்.
இவ்வாறு வேளாண் அதிகாரி கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT