Published : 16 Dec 2020 12:11 PM
Last Updated : 16 Dec 2020 12:11 PM
ஜெயலலிதா பேரவையின் சார்பில் திருமங்கலம் அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு திருக்கோயில் கட்டும் பணியினை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆய்வு செய்தார்
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் உள்ள டி.குன்னத்தூர் அருகே கழக ஜெயலலிதா பேரவை செயலாளரும்,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் அமைச்சருமான ஆர் பி உதயகுமார்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டி வருகிறார்.
இந்த பணியினை ஆய்வு செய்தார் அவருடன் அவரது தந்தையார் ஆர்.போஸ் அவரது தாயார் பி.மீனாள் மற்றும் கல்லுப்பட்டி ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி உட்பட பலர் இருந்தனர்
இதுகுறித்து அவர் கூறியதாவது
”உலகமெங்கும் வாழும் 10 கோடி தமிழ் மக்களின் இதயங்களில் தெய்வமாக வாழ்ந்து வருகிறார் ஜெயலலிதா.
மக்கள் நலனே தன் நலன் என்று மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து ஒரு தியாக தீபமாக வாழ்ந்து ஒன்றரை கோடி கழகத் தொண்டர்களின் குலதெய்வமாக அம்மா திகழ்ந்து வருகிறார்
இந்த இயக்கம் இன்னும் நூறு ஆண்டுகாலம் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று அம்மா அவர்கள் இலட்சிய முழங்க முழக்கமிட்டார் அந்த லட்சியம் முழக்கங்களை இன்றைக்கு நமது முதல்வரும், துணை முதல்வரும் அம்மாவின் பாத தடத்தில் அடிபிறழாமல் நிறைவேற்றுகின்றனர்.
ஜெயலலிதா முக்காலும் உணர்ந்த தீர்க்கதரிசி அதனால்தான் இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழ் இனமே வணங்கும் தமிழர் குலசாமி அவர் திகழ்கிறார்கள். தொடர்ந்து இன்றைக்கு எங்களது குடும்பத்தாரும் குல தெய்வமாக அம்மாவை வழிபட்டு வருகிறோம் அந்த தெய்வத்திற்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் நல்லாசியுடன் தற்போது கழக அம்மா பேரவை சார்பில் கோயில் கட்டி வருகிறோம்
திருக்கோயிலில் ஜெயலாலிதாவுக்கு திரு உருவ வெண்கலச் சிலையும் ,அதேபோல் எம்.ஜி.ஆருக்கு முழு நீள வெண்கலச் சிலையும் அமைக்கப்பட உள்ளது .
அதுமட்டுமில்லாது இந்த திருக்கோவிலில் அனைத்து மக்களும் வழிபடும் வண்ணம் அதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
இந்த பணி விரைவில் முடிவுற்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது என கூறினார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT