Published : 16 Dec 2020 03:14 AM
Last Updated : 16 Dec 2020 03:14 AM
ரஜினி தொடங்கும் புதிய கட்சிக்கு ‘மக்கள் சேவை கட்சி’ என பெயரிடப் பட்டுள்ளதாகவும், அக்கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தக வல்கள் வெளியாகியுள்ளன. கட்சி அலு வலகமாக சென்னை எர்ணாவூரில் உள்ள ரசிகர் மன்ற நிர்வாகியின் வீட்டு முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2019-ல் பதிவு செய்திருந்த ஒரு அரசியல் கட்சியை அதன் நிர்வாகிகளிடம் பேசி நடிகர் ரஜினிகாந்த் பெற்று பெயர் மாற்றம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2017 டிசம்பரில் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக நடிகர் ரஜினி காந்த் அறிவித்தார். 3 ஆண்டுகள் கடந்த நிலையில், கடந்த 3-ம் தேதி செய்தி யாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ஜனவரி யில் புதிய கட்சி தொடங்கப்படும் என்றும் அதற்கான தேதி டிசம்பர் 31-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் அதிகாரப்பூர்வ மாக தெரிவித்தார். கட்சியின் மேற்பார்வை யாளராக தமிழருவி மணியன், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தி ஆகியோரை நியமித்தார்.
ரஜினியின் அறிவிப்பால் தமிழகம் முழு வதும் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந் துள்ளனர். தேர்தலை சந்திப்பதற்கான பணிகளிலும் ஈடுபட்டுள்ளளனர்.
இதனிடையே, புதிய கட்சி தொடங்கு வது குறித்து தலைமை தேர்தல் ஆணை யத்தில் ரஜினி விண்ணப்பிப்பார் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்தச் சூழலில் ரஜினி தொடங்கும் அரசியல் கட்சி விவகாரத்தில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
புதிய அரசியல் கட்சி தொடங்குவது குறித்து டெல்லியின் பிரபல வழக் கறிஞரிடம் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். டெல்லி அப்துல் கலாம் சாலை யில் (பழைய அவுரங்கசீப் சாலை) உள்ள பங்களாவில் ரஜினியின் உதவியாளர் மூலம் நடந்த இந்த ஆலோசனையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. ரஜினியின் அரசியல் பிரவேசம் முடிவான பிறகு டெல்லியின் இருதயப் பகுதியில் உள்ள இந்த பங்களா அவருக்காக வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் ரஜினிக்கு நெருக்கமான டெல்லி நட்பு வட்டாரங்கள் கூறும்போது, ‘‘புதிதாக அரசியல் கட்சி பதிவு செய்வதில் செலவு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக சுமார் 300 பக்கத்துக்கு சமர்ப் பிக்கப்படும் நிர்வாகிகளின் பிரமாணப் பத்திரங்களில் அவர்களின் சொத்து உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவரங்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதைவிட ஏற்கெனவே பதிவு செய்துள்ள ஒரு கட்சியைப் பெற்று பெயர் மாற்றம் செய்வது எளிது என்பதால், ரஜினி அந்த வழியை நாடியுள்ளார்’’ என தெரிவித்தன.
இந்த விஷயங்கள் முன்கூட்டியே வெளி யில் கசிந்துவிடக் கூடாது என்பதற்காக தனது நம்பிக்கைக்குரிய மகாராஷ்டிரா வழக்கறிஞர் ஒருவரை இதற்கான பணி யில் அமர்த்தினார் ரஜினி. கடந்த 2018 இறுதியில், ‘அனைத்திந்திய மக்கள் சக்தி கழகம்’ எனும் பெயரில் பதிவான ஒரு அரசியல் கட்சியின் நிர்வாகிகளிடம் அந்த வழக்கறிஞர் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. ஒரு கட்சி பதிவாகி அதன் பெயர் அல்லது நிர்வாகிகளை மாற்ற குறைந்தது ஒரு வருட அவகாசம் எடுப்பது வழக்கம்.
அதன்படி, ரஜினிக்கு வேண்டிய சிலரை நிர்வாகிகளாக போட்டு, கட்சியின் பெயரை ‘மக்கள் சேவை கட்சி’ என்று மாற்றியுள்ளனர். இதன் தலைவராக எஸ்.பி.ஜேம்ஸ், பொதுச்செயலாளராக ஆண்டனி ஜோ ராஜா, பொருளாளராக மரியா ஜான் அகஸ்டின் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். இவர்கள் அனை வரும் தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளராக இருந்த ஏ.பி. ஜோசப் ஸ்டாலின் குடும்பத்தினர் என கூறப்படுகிறது. இவர், பல வருடங் களுக்கு முன்பு தூத்துக்குடியில் இருந்து மகராஷ்டிராவுக்கு இடம்பெயர்ந்து விட்டார். அங்கு சுரங்கம் உள்ளிட்ட பல தொழில்களை செய்து வந்த ஒருவருடன் பணியாற்றிய ஜோசப் ஸ்டாலின், பெரிய கோடீஸ்வரராக இருப்பதாகவும் தகவல் கள் தெரிவிக்கின்றன.
அவ்வப்போது தூத்துக்குடிக்கு வந்து ரஜினி ரசிகர் மன்றத்தின் பொறுப்பு களையும் ஜோசப் ஸ்டாலின் கவனித்து வருவதாக கூறப்படுகிறது. நிர்வாகிகள் பட்டியலில் ரஜினியின் பெயர் இடம் பெற வில்லை. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூட அதன் நிர்வாகிகள் பட்டியலில் தனது பெயரை குறிப்பிடவில்லை.
மக்கள் சேவை கட்சியின் 2018-19 ஆண் டுக்கான வரவாக குறிப்பிடப்பட்ட ரூ.34 ஆயி ரத்தை செலவாக தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 30-ல் பெயர் மாற்றப்பட்ட மக்கள் சேவை கட்சியின் அலுவலக முகவரியாக சென்னை எர்ணாவூர் பாலாஜி நகரில் உள்ள ஜோசப் ஸ்டாலின் வீட்டு முகவரி குறிப் பிடப்பட்டுள்ளது. மேலும், மக்கள் சேவை கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது ஆட்டோ சின்னம், பொதுச் சின்னங்கள் பட்டியலில் உள்ளது. ரஜினி கட்சி இச்சின்னத்தில் போட்டியிட்டு குறைந்தது 6 தொகுதிகளில் வெற்றி அல்லது பதிவாகும் மொத்த வாக்குகளில் 5 சதவீத வாக்குகள் பெற்றால் அவரது கட்சிக்கு ஆட்டோ சின்னம் நிரந்தரமாகும்.
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி விளக்கம்
ஏற்கெனவே பதிவான கட்சியை ரஜினி பேசி பெறுகிறார் என்ற செய்தி ஊடகங்களில் கசிந்ததையடுத்து ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நேற்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மன்றத்தின் நிர்வாகி வி.எம்.சுதாகர் பெயரில் வெளியான அந்த அறிக்கையில்,
‘இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி அதில் இடம்பெற்றிருந்த ஒரு கட்சியின் பெயரும், சின்னமும் ரஜினி மக்கள் மன்றத்தினுடையது என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைமையில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் வரை நம் ரஜினி மக்கள் மன்றக் காவலர்கள் காத்திருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடக செய்திகளை மறுக்காமல், தலைமையிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்கும்படி மட்டும் அறிக்கையில் வேண்டுகோளாக விடப்பட்டுள்ளது. எனவே, ரஜினி கூறியபடி டிசம்பர் 31-க்கு முன்பாகவே அவரது கட்சியின் பெயர் குறித்த விவரங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT