Last Updated : 13 Oct, 2015 08:06 AM

 

Published : 13 Oct 2015 08:06 AM
Last Updated : 13 Oct 2015 08:06 AM

மீத்தேன் திட்டத்தால் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு: தொழில்நுட்ப வல்லுநர் குழு பரிந்துரையில் அதிர்ச்சித் தகவல்

மீத்தேன் எரிவாயு திட்டத்தால் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப் பதாக வல்லுநர் குழு அளித்த பரிந் துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார்குடியை மையமாகக் கொண்டு சுமார் 691 கி.மீ. சுற்றள வில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் நிலத்தடி நிலக்கரி படுகையிலிருந்து மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் மத்திய அரசால், 2010-ல் அறிவிக்கப்பட்டு, கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்துக்கு உரிமம் வழங்கப்பட்டது.

கடும் எதிர்ப்பால் 2013-ல் தமிழக அரசு இடைக்காலத் தடை விதித்து, வல்லுநர் குழுவை அமைத்தது. மக்களின் எதிர்ப்பு தொடர்ந்துவரும் நிலையில், வல்லுநர் குழுவின் பரிந்துரையை ஏற்று மீத்தேன் திட்டத்துக்கு தமிழக அரசு நிரந் தர தடை விதித்துள்ளது. வல்லுநர் குழு அளித்த பரிந்துரைகளில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

ஐக்கிய நாடுகள் அவையின் வளர்ச்சித் திட்டப் பிரிவு, இந்தப் பகுதியில் நிலத்தடி நீர் எடுப்பதால் உண்டாகும் நில அமைப்பியல் மாற்றம் மற்றும் அதனால் நிலநடுக் கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வு செய்து தெரிவித்துள்ளது.

மிகப்பெரும் அளவிலான நிலத் தடி நீர் வெளியேற்றம் நடந்தால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகு ஆழத்துக்குக் கொண்டு செல்ல நேரிடும். ஆழ்துளைக் கிணறுகளின் கூட்டுத் தொகுதி குறுக்கும் நெடுக்குமாகச் செல்வ தால் இப்பகுதியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், அழகான இயற்கையான அமைப்பும் மாறக் கூடும்.

மீத்தேன் வாயு கசிவு, விஷவாயு வெளியேற்றம் அப்பகுதியில் வளி மண்டல வெப்பநிலை மாற்றத்தை ஏற்படுத்தும். மழை அளவு குறை வதற்கும் வாய்ப்புகள் உண்டு.

மீத்தேன் வாயு எடுக்கப்பட்ட பின்னர் இப்பகுதியில் ஏற்படுத்தப் பட்ட ஆயிரக்கணக்கான கிணறு களை தூர்க்கவோ, மீண்டும் பயன்படுத்தவோ முடியாது.

வாயு கொண்டுசெல்லும் குழாய் களில் ஏற்படும் வாயு கசிவு, அதனால் ஏற்படும் பெருவெடிப்பு இப்பகுதியில் உள்ள மக்களின் உயிர், உடைமை மற்றும் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. மீத்தேன் கிணறு அமையவுள்ள 4,266 ஏக்கரில் உற்பத்தி செய் யப்படும் அரிசி 2.77 லட்சம் மக்க ளுக்கு உணவளிக்க வல்லது.

மேற்கண்ட பாதிப்புகளை கருத் தில்கொண்டு திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் மன் னார்குடி வட்டாரத்தில் உத்தேசிக் கப்பட்டுள்ள நிலக்கரிப் படுகை மீத்தேன் எரிவாயு திட்டத்தை நிராகரிக்கலாம் அல்லது மறு ஆய்வு செய்யலாம் என வல்லுநர் குழு ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x