Published : 13 Jun 2014 10:33 AM
Last Updated : 13 Jun 2014 10:33 AM
கிராமப்புறங்களில் பொதுத் திட்டத்தின் அடிப்படையில் இயங்கும் சாதாரண தொலைபேசி களுக்கான மாத வாடகையை பிஎஸ்என்எல் நிறுவனம் 110 ரூபாயிலிருந்து 120 ரூபாயாக உயர்த்தி உள்ளது. ஆயிரம் தொடர்புகள் முதல் 30 ஆயிரம் தொடர்புகள் இருக்கும் தொலை பேசி இணைப்பகங்களுக்கு இந்த உயர்வு வரும் 01.07.2014 முதல் அமலுக்கு வருகிறது.
சாதாரண தொலைபேசிகளில் இருந்து பிஎஸ்என்எல் மற்றும் இதர தொலைபேசி நிறுவனங்களின் தொலைபேசிகளுக்கு செய்யப்ப டும் அழைப்புகளுக்கான நேர அளவையும் பிஎஸ்என்எல் குறைத் துள்ளது.
நேரம் குறைப்பு
பிஎஸ்என்எல் சாதாரண தொலை பேசியில் இருந்து பிஎஸ்என்எல் சாதாரண தொலைபேசிக்கு செய்யப்படும் அழைப்புகளுக்கான நேரம் 180 வினாடிகளில் இருந்து 120 ஆகவும் பிஎஸ்என்எல் செல்போன்களுக்கும் மற்ற நிறுவனங்களின் செல் போன்களுக்கும் செய்யப்படும் அழைப்புகளுக்கான நேரம் 120 வினாடிகளில் இருந்து 90 வினாடிகளாகவும் குறைக்கப் பட்டுள்ளது. இது 01.07.2014 முதல் அமலுக்கு வருகிறது. இத்தகவலை உதவி பொதுமேலாளர் என்.மோகன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT