Published : 15 Dec 2020 03:15 AM
Last Updated : 15 Dec 2020 03:15 AM

புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 தொகுதிகளில் போட்டியிட ஆர்வம் காட்டும் இடதுசாரிகள்

கோப்புப்படம்

புதுக்கோட்டை

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து ஆலங்குடி, கந்தர்வக்கோட்டை, அறந்தாங்கி, புதுக்கோட்டை ஆகிய தொகுதி களில் போட்டியிடுவதற்கு இடதுசாரி கட்சியினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை(தனி), விராலி மலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள் ளன. இதில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுக தலா 3 தொகுதிகளில் வெற்றி பெற்றன.

இந்நிலையில், வரும் தேர்தலில் கந்தர்வக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என திமுக தலைமை யிடம் வலியுறுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி கட்சித் தலைமைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

இதேபோல, ஆலங்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 2 தொகுதி களையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்க கூட்டணி தலைமை யிடம் வலியுறுத்த வேண்டும் என கட்சித் தலைமைக்கு மாவட்டக் குழுவில் இருந்து தகவல் தெரிவிக் கப்பட்டுள்ளது. இதையடுத்து, இவ்விரு தொகுதிகளிலும் இடது சாரிகள் தேர்தல் பணிகளில் மும் முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூறியதாவது: கந்தர் வக்கோட்டை தொகுதியில் இதுவரை நடைபெற்ற 2 தேர்தல் களிலும் அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கணிசமான வாக்குகளை பெற்றது.

இத்தொகுதி தனி தொகுதியா கவும் இருப்பதாலும், வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தி யாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருப்பதாலும் திமுக கூட்டணியில் இருந்து இத்தொகுதியை எங்கள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்தால் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். அத்துடன், அறந்தாங்கி தொகுதி யையும் பரிந்துரை செய்யுமாறு மாவட்டக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழுவினர் கூறியது: ஆலங்குடி தொகுதியில் கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. அதற்கு முந்தைய தேர்தலில் அதிமுகவிடம் 652 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி வாய்ப்பை இழந்தது. எனவே, இந்த தொகுதியையும், அதிமுக கூட்டணியில் 2011-ல் போட்டியிட்டு வெற்றி பெற்ற புதுக்கோட்டை தொகுதியையும் ஒதுக்க கூட்டணி தலைமைக்கு பரிந்துரைக்குமாறு மாநில தலைமைக்கு தெரிவித்துள்ளோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x