Published : 11 Dec 2020 07:30 AM
Last Updated : 11 Dec 2020 07:30 AM
காஞ்சிபுரம் அருகே வேளாண் விரிவாக்க மைய அலுவலகத்தில் கழிப்பறை இல்லாததால் அருகில் உள்ள வீட்டுக்குச் சென்று கழிப்பறையில் தவறி விழுந்து உயிரிழந்த மாற்றுத் திறனாளி ஊழியர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இச்சங்கத்தின் மாவட்ட தலைவர் வெ.லெனின், மாவட்டச் செயலர் துரை மருதன் ஆகியோர் காஞ்சி ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: காஞ்சி அருகே உள்ளகளக்காட்டூர் அரசு வேளாண் விரிவாக்க மையத்தில் பணியாற்றியவர்சரண்யா (24). மாற்றுத் திறனாளியான இவர் கடந்த 5-ம் தேதி இந்தஅலுவலகத்தில் கழிப்பறை இல்லாததால், அருகில் உள்ள வீட்டுக்குச் சென்றபோது, அங்கு உள்ள கழிப்பறை தொட்டியில் தவறி விழுந்துஉயிரிழந்தார். அந்த அலுவலகத்தில் கழிப்பறை இல்லாத நிலையில்தான் மாற்றுத் திறனாளியான அவரது இறப்பு நிகழ்ந்துள்ளது.
இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் கழிப்பறை உள்ளதா என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வுசெய்ய வேண்டும். அரசு அலுவலகங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி ஊழியர்கள் பயன்படுத்த பிரத்தியேக கழிப்பறைகளை அமைக்க வேண்டும்.
சரண்யாவின் ஊதியத்தை மட்டுமே நம்பி இருந்த அவரது குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT