Published : 08 Dec 2020 07:52 PM
Last Updated : 08 Dec 2020 07:52 PM
ராமேஸ்வரம் - புவனேஸ்வர், ஓகா மற்றும் மதுரை, திருச்சி, செங்கல்பட்டு வழியாக நாகர்கோவில் - மும்பை ரயில் நிலையங்களுக்கிடையே பண்டிகை கால சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
1. வண்டி எண் 08496 புவனேஸ்வர் - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் 11.12.2020 முதல் 25.12.2020 வரை வெள்ளிக்கிழமைகளில் புவனேஸ்வரில் இருந்து நண்பகல 12.10 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமைகளில் இரவு 10.35 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 08495 ராமேஸ்வரம் புவனேஸ்வர் வாராந்திர சிறப்பு ரயில் 13.12.2020 முதல் 27.12.2020 வரை ராமேஸ்வரத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 08.50 மணிக்கு புறப்பட்டு திங்கள் கிழமைகளில் மாலை 06.10 மணிக்கு புவனேஸ்வர் சென்று சேரும்.
இந்த ரயில்கள் குர்தா ரோடு, பெர்காம்பூர், விஜய நகரம், விசாகப்பட்டினம், துவ்வாடா, விஜயவாடா, நெல்லூர், குண்டூர், சென்னை எழும்பூர், விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
2. வண்டி எண் 06733 ராமேஸ்வரம் - ஓகா வாராந்திர சிறப்பு ரயில் 11.12.2020 முதல் 25.12.2020 வரை ராமேஸ்வரத்திலிருந்து வெள்ளிக்கிழமைகளில் இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு திங்கட் கிழமைகளில் காலை 10.20 மணிக்கு ஓகா சென்று சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06734 ஓகா - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் 15.12.2020 முதல் 29.12.2020 வரை செவ்வாய்க்கிழமைகளில் காலை 08.40 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமைகளில் இரவு 07.15 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேரும்.
இந்த ரயில்கள் மண்டபம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, திருப்பதி, ரேணிகுண்டா, கடப்பா, யெர்ரகுண்ட்லா, துரோணாசலம், கர்னூல் சிட்டி, மெகபூப் நகர், கச்சகுடா, கமாரெட்டி, நிஜாமாபாத், முட்கட், நான்டேட், பூர்ணா, பர்பானி, ஜல்னா அவுரங்காபாத், நாகர்சால், மன்மாட், ஜல்கான், நன்டூர்பர், சூரத், வடோதரா, ஆமதாபாத், விரம்கம், சுரேந்திர நகர், வான்கனேர், ராஜ்கோட், ஹாபா, ஜாம்நகர், ஹம்பாலியா, துவாரகா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
3. வண்டி எண் 06352 நாகர்கோவில் - மும்பை வாரம் இருமுறை சேவை சிறப்பு ரயில் 13.12.2020 முதல் 30.12.2020 வரை வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து காலை 06.00 மணிக்கு புறப்பட்டு வெள்ளி மற்றும் திங்கட் கிழமைகளில் இரவு 07.15 மணிக்கு மும்பை சென்று சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06351 மும்பை - நாகர்கோவில் வாரமிருமுறை சேவை சிறப்பு ரயில் 14.12.2020 முதல் 01.01.2021 வரை வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் இரவு 08.35 மணிக்கு புறப்பட்டு ஞாயிறு மற்றும் புதன் கிழமைகளில் காலை 07.30 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.
இந்த ரயில்கள் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், திருத்தணி, ரேணிகுண்டா, கடப்பா, யெர்ரகுண்ட்லா, தாடி பத்திரி, குண்டக்கல், அடோனி, மந்த்ராலயம் ரோடு, ரெய்ச்சூர், யாட்கிர், வாடி, கலபுராகி, சோலாப்பூர், குர்துவாடி, டான்ட் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment