Published : 08 Dec 2020 01:07 PM
Last Updated : 08 Dec 2020 01:07 PM
அரியலூர் மாவட்டத்தில் அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று (டிச.8) முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அச்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், திருமானூர், தா.பழூர், ஆண்டிமடம், செந்துறை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் மருந்தகம், பால் கடைகள் தவிர அனைத்துக் கடைகளும் இன்று அடைக்கப்பட்டிருந்தன. அரியலூர் நகரில் மட்டும் 50 சதவீதக் கடைகள் மூடப்பட்டிருந்தன. மாவட்டத்தில் மொத்தமாக 75 சதவீதக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
அரியலூர் அண்ணா சிலை அருகே அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், நிர்வாகிகள் உலகநாதன், தண்டபாணி, செங்கமுத்து, தங்க.தர்மராஜன், மாரியம்மாள், அம்பேத்கர்வழியன், விஸ்வநாதன், மகாராஜன், மணியன், சின்னத்துரை, பாண்டியன் உட்பட பலரும் கலந்துகொண்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்திப் பேசினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT