Published : 20 Oct 2015 07:33 AM
Last Updated : 20 Oct 2015 07:33 AM
தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்ஸுக்கு முன்பதிவு செய்பவர்களிடம் அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே ஆம்னி பஸ்களுக்கும் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகம் முழுவதும் 3 ஆயிரத் துக்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னையி லிருந்து மட்டும் வெளியூர்களுக்கு தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற் பட்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்படு கின்றன. அரசு பஸ்களைப் போல, ஆம்னி பஸ்களுக்கு கட்டண நிர்ணயம் கிடையாது. டீசல் விலை உயரும் போதெல்லாம் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
அடுத்த மாதம் 10-ம் தேதி தீபாவளி பண்டிகை வருவதையொட்டி சொந்த ஊருக்கு செல்ல மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ரயில்களில் டிக்கெட் கிடைக்காததால் பெரும் பாலானோர் அரசு மற்றும் ஆம்னி பஸ்களை நம்பியே இருக்கின்றனர்.
வசதியாக செல்ல விரும்பும் நடுத்தர மக்கள் ஆம்னி பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். ஓரளவுக்கு குறைந்த கட்டணம் கொண்ட ஆம்னி பஸ்களில் நவம்பர் 7, 8, 9-ம் தேதிகளுக்கு பெரும்பாலும் முன் பதிவு முடிந்துவிட்டது. தற்போது, அதிக கட்டணம் வசூலிக்கும் நவீன ஆம்னி பஸ்களில்தான் இடங்கள் காலியாகவுள்ளன.
குறைந்தபட்சமாக சென்னை - திருச்சி (ரூ.650) ஏசி (ரூ.800), சென்னை - மதுரை (ரூ.850) ஏசி (ரூ.1000), சென்னை - நெல்லை (ரூ.950) ஏசி (ரூ.1,200), சென்னை கோவைக்கு (ரூ.850) ஏசி (ரூ.1000) என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இத்தகைய அதிகமான கட்டண வசூலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஆம்னி பஸ்களுக்கும் தனியாக கட்டணம் நிர்ணயிக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
முதல்வர் தலையிட வேண்டும்
தமிழ்நாடு முற்போக்கு நுகர் வோர் மையம் தலைவர் டி.சட கோபன் கூறும்போது, ‘‘முக்கிய மான பண்டிகை நாட்களில் ஆம்னி பஸ்களில் கட்டணம் பல மடங்கு அதிகமாக வசூலிக் கப்படுகிறது. ஆம்னி பஸ் முன் பதிவு இணைய தளங்களில் இந்த மாத கட்டணத்துக்கும், அடுத்த மாத கட்டணத்துக்கும் ரூ.500 முதல் ரூ.800 வரை வித்தியாசம் இருப்பதை காண முடிகிறது. ஆட்டோக்களுக்கு நிர்ணயிக்கப் பட்டதைப் போல், ஆம்னி பஸ் களுக்கும் தனியாக கட்டணத்தை நிர்ணயிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டணமே நிர்ணயிக்காமல், அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறுவது கண்துடைப்பாகவே இருக்கும்'' என்றார்.
விரைவில் குழுக்கள்
இது தொடர்பாக போக்குவரத் துத் துறை ஆணையரக அதிகாரி களிடம் கேட்டபோது, ‘‘தமிழக அரசு சமீபத்தில்தான் ஆட்டோக் களுக்கு கட்டணத்தை நிர்ணயம் செய்து, முறைப்படுத்தி வரு கிறது. தற்போது, கால் டாக்சியை ஒழுங்குபடுத்த புதிய விதிமுறைகளை கொண்டு வரவுள்ளது. ஆம்னி பஸ்களுக்கு இதுவரையில் கட்டண நிர்ணயம் இல்லை. இதுதொடர்பாக அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு குழுக்கள் அமைத்து ஆய்வு நடத்தப்படும். அதிக கட்டணம் வசூல், பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் ஆம்னி பஸ்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
தமிழக அரசு, ஆம்னி பஸ்களுக்கு கட்டணமே நிர்ணயிக்காமல், அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறுவது கண்துடைப்பாகவே இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT