Published : 06 Dec 2020 03:16 AM
Last Updated : 06 Dec 2020 03:16 AM
தமிழகத்தில் 1,800-க்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழ்அறிஞர்கள், எல்லைக் காவலர்கள்,அவர்களது வாரிசுகள் ஆகியோரதுஉதவியாளரும் அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் என்று போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள், அவர்களது வாரிசுகள், தமிழ்அறிஞர்கள், எல்லைக் காவலர்கள்,அவர்களது வாரிசுகள் என 1,836பேருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் தமிழகம் முழுவதும் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு, பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே, இவர்களில் 60வயதுக்கு மேற்பட்டவர்கள் வயதுமுதிர்வு காரணமாக, தனியாகபயணம் செய்ய இயலாத நிலையில், உடன் பயணிக்கும் உதவியாளருக்கும், பேருந்துகளில் கட்டணம் இல்லா பயணச் சலுகை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
இதையடுத்து, 60 வயதுக்கு மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழ் அறிஞர்கள், எல்லைக்காவலர்கள், அவர்களது வாரிசுகளுடன் செல்லும் உதவியாளர் ஒருவருக்கும் கட்டணம் இல்லா பயண அட்டை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தமிழ் வளர்ச்சித் துறை மூலம் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, மேற்குறிப்பிட்ட 60 வயதுக்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள், அவர்களது வாரிசுகள், தமிழ் அறிஞர்கள், எல்லைக் காவலர்கள், அவர்களது வாரிசுகள் ஆகியோர் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகங்களை அணுகி, தங்களது உதவியாளரின் விவரங்களை சமர்ப்பித்து, அனைத்து போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் தமிழகம் முழுவதும் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய பயண அட்டை பெற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT