Published : 10 Oct 2015 05:31 PM
Last Updated : 10 Oct 2015 05:31 PM
நான்காவது தலைமுறையினருக்கு வைத்தியம் பார்க்கும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, தென் தமிழகத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையாக செயல்படு கிறது.
ராமநாதபுரம், தேனி, திண்டுக் கல், சிவகங்கை, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க முடியாத, மேல் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள், விபத் தில் காயமடைவோர் இங்குதான் அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஆண்டுக்கு 25 லட்சம் வெளி நோயாளிகள், 8 லட்சம் உள் நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். ஆண்டுக்கு 22 ஆயிரம் கர்ப்பிணிகள் பிரசவத்துக்காகச் சேர்க்கப்படுகின்றனர்.
மொத்தம் 12.47 ஏக்கரில் அமைந் துள்ள இந்த மருத்துவமனையில், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு, குழந்தைகள் நலம் மற்றும் அறுவை சிகிச்சை, முடநீக்கியல், மனநலம், பால்வினை நோய் பிரிவு, தோல் நோய், மயக்கவியல் துறை, மூளை நரம்பியல், புற்று நோய் உட்பட 32 சிகிச்சைப் பிரிவுகள் செயல்படுகின்றன. உயர் வேதியியல் ஆய்வக வசதி, சி.டி. ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்ட நவீன சிகிச்சை வசதிகள், தனியார் மருத்துவ மனைகளுக்கு நிகராக இங்கும் உள்ளன.
1942-ம் ஆண்டு இந்த மருத்து வமனையைக் கட்டி ஆங்கிலேயர் திறந்துள்ளனர். 73-வது ஆண்டாக நான்காவது தலைமுறைக்கு இந்த மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து சொக்கலிங்க நகரைச் சேர்ந்த காந்தி (68) கூறுகையில், மதுரையை விரிவாக்கம் செய்ய இங்கிருந்த இரட்டைக் கோட்டை சுவரை ஆங்கிலேயர் உடைத்தனர். இந்த வேலையில் ஈடுபடுத்தப்பட்ட தொழி லாளர்களுக்கு எலும்பு முறிவு, ரத்தக் காயங்கள் ஏற்பட்டன.
அப்போது ஆங்கிலேயரின் சிந் தனையில் உதித்ததுதான் இன்றைய ராஜாஜி மருத்துவ மனை. அந்த காலத்தில் ஆங்கில மருத்து வம் பற்றிய விழிப்புணர்வு இல்லா ததால், இங்க வந்தா வெட்டிக் கொன்னுப்புடுவாங்கனு ஆரம்பத் தில் யாரும் சிகிச்சைக்கு வர மாட்டார்கள். இன்றோ, ஒவ்வொரு நாளும் திரளும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்கள் திண்டாடுகிறார்கள்.
மருத்துவமனையில் நோயாளி கள் சாப்பிட, அந்த காலத்தில் பற்ற வைத்த அடுப்பு இன்றும் எரிந்து கொண்டே இருக்கிறது. எங்கப்பா, அம்மா இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தாங்க. அவங்க கூட நானும் சிறுவனாக இருக்கும் போது சிகிச்சைக்கு வந்தேன்.
அதற்குப் பிறகு என்னோட குழந்தைகளை அழைச்சிட்டு வந்தேன். இப்போது என்னோட பேரக்குழந்தைகளை சிகிச்சைக்கு அழைச்சிட்டு வருகிறேன். நான்கு தலைமுறையாக பல கோடி மனிதர் களை இந்த மருத்துவமனை காப்பாற்றி உள்ளது.
அதற்கு நன்றிக் கடனாக இந்த மருத்துவமனை 75 ஆண்டு களை கடக்கும்போது, வைர விழாவை சிறப்பாகக் கொண்டாட மருத்துவமனை நிர்வாகம், மருத்து வக் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள், தற்போது படிக்கும் மாணவர்கள், பயனடைந்த மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சேர்ந்து முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து டீன் ரேவதியிடம் கேட்டபோது, ராஜாஜி மருத்துவ மனையின் 50-வது ஆண்டு விழாவைக் கொண்டாடினோம். 75-வது ஆண்டில் கண்டிப்பாக வைரவிழாவைக் கொண்டாடு வோம் என்றார்.
சிகிச்சை பெற்ற கக்கன், பதறிய ஊழியர்கள்
காந்தி மேலும் கூறுகையில், ஆரம்பத்தில், இந்த மருத்துவமனை எர்ஸ்கின்ஸ் என்ற பெயரில் அழைப்பட்டது. கருணாநிதி முதல்வராக இருந்தபோது மதுரை அரசு பொதுமருத்துவமனையாக பெயர் மாறியது. முன்னாள் அமைச்சர் கக்கன், ஒருமுறை நோய்வாய்ப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிகூட இன்றி சாதாரண மக்களோடு தரையில் படுத்து சிகிச்சை பெற்றார். தகவல் அறிந்து பதறிப் போன அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஓடிச்சென்று அவரது இரு கரங்களையும் பற்றிக் கொண்டு நலம் விசாரித்தார். எம்.ஜி.ஆர். வந்து பார்த்த பிறகே மருத்துவமனை ஊழியர்களுக்கு, சிகிச்சை பெறுபவர் முன்னாள் அமைச்சர் கக்கன் என்பதே தெரிந்தது. அப்போது, எம்.ஜி.ஆர். அரசு பொது மருத்துவமனை என்ற பெயரை அரசு ராஜாஜி மருத்துவமனை எனப் பெயர் மாற்றினார் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT