Last Updated : 19 Oct, 2015 07:42 AM

 

Published : 19 Oct 2015 07:42 AM
Last Updated : 19 Oct 2015 07:42 AM

தி இந்து செய்தி எதிரொலி: மலேசியாவில் தவித்த 6 தமிழர்கள் சொந்த ஊர் திரும்பினர்

மலேசிய நாட்டில் பியூட்டி பார்லர் உரிமையாளரான தமிழரால் கொத்தடிமைகள்போல நடத்தப்பட்ட 27 தமிழர்களில் ஒரு பகுதியினர், வாட்ஸ்அப் நண்பர்கள் குழுவினரின் முயற்சி மற்றும் ‘தி இந்து’ செய்தி எதிரொலியால் நேற்று முன்தினம் இரவு திருச்சி விமான நிலையத்துக்கு வந்தனர்.

மலேசிய நாட்டின் அலோர் செடார் நகரில் அழகுக்கலை நிறுவனம் நடத்துபவர் குமார். இவரது கடையில் ஒப்பந்த அடிப்படையில் தமிழகத்தைச் சேர்ந்த 27 பேர் பணிபுரிந்தனர்.

இந்நிலையில், தங்களை கொத்த டிமைகளைப்போல நடத்துவதாக வும், ஒப்பந்த காலம் முடிந்தவர் களை சொந்த நாட்டுக்கு அனுப்பா மல் தடுத்து வைத்துள்ளதாகவும் ‘வாட்ஸ்அப்’ மூலம் தகவல் தெரி வித்த தொழிலாளர்கள், அங்கிருந்து தப்பி இந்திய தூதரகத்தில் தஞ்ச மடைந்தனர். ஆனால், அவர்களை மீட்க தூதரகம் போதிய முயற்சி எடுக்கவில்லை எனக் கூறப்படு கிறது.

இதையடுத்து, தங்களை மீட்குமாறு மீண்டும் வாட்ஸ்அப் மூலம் தொழிலாளர்கள் உதவி கோரினர். தகவலறிந்த தமிழ்நாடு சமூக சேவை சர்வதேச கழகப் பொதுச் செயலாளரான பட்டுக் கோட்டை ஏ.பிரபாகரன், வாட்ஸ்அப் நண்பர்கள் குழு மூலம் தொழி லாளர்களுக்கு அடைக்கலம் தந்து, அவர்கள் நாடு திரும்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதுகுறித்த செய்தி கடந்த 15-ம் தேதி ‘தி இந்து’வில் பிரசுரமானது.

இந்நிலையில், தஞ்சை மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த எஸ்.பிரபாகரன், கே.செந்தில் குமார், வீ.ராஜ்குமார், பட்டுக்கோட்டை மாயக்கண்ணு, காரைக்குடி கு.செல்வம், கோவை முருகேஷ் ஆகிய 6 பேர் கொண்ட முதல் குழுவினர், விமானம் மூலம் நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்சி விமான நிலையத்துக்கு வந்தனர். அவர்களை, வாட்ஸ்அப் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த நிர்வாகிகள் வரவேற்று அழைத்துச் சென்றார்.

தொழிலாளர்களில் ஒருவரான பேராவூரணி எஸ்.பிரபாகரன் கூறும்போது, “நாங்கள் அங்கு தவிப்பது குறித்த ‘தி இந்து’ செய் தியை, ‘மலேசிய நண்பன்’ நாளிதழ் மறுநாள் வெளியிட்டிருந்தது. அதைப் பார்த்த இந்திய தூதரக அதிகாரிகள், செய்தி வெளி யிட்டு தங்களை அவமானப்படுத்தி விட்டதாக எங்களைக் கடிந்து கொண்டனர்.

பின்னர், ஒரு குழுவினருக்கு (6 பேர்) மட்டும் அவசரம் அவசரமாக விமான டிக்கெட் தயார் செய்து, ஊருக்கு அனுப்பி வைத்தனர். இந்தியாவுக்குச் சென்று ‘எங்களை நல்லபடியாக நடத்தினர்’ என்று தெரிவித்தால் மட்டுமே, மற்றவர் களை அடுத்தடுத்த நாட்களில் அனுப்புவோம் என்றனர்.

மேலும், அங்கு தவித்த மற்ற தொழிலாளர்களையும் தங்கள் பொறுப்பில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர். வாட்ஸ்அப் நண்பர்கள் குழுவினர், ‘தி இந்து’ நாளிதழின் முயற்சிக்கு மிக்க நன்றி” என்றனர்.

மலேசியாவிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வந்த முதல் குழுவினரை வரவேற்ற, வாட்ஸ்அப் நண்பர்கள் குழுவினர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x