Published : 03 Dec 2020 03:15 AM
Last Updated : 03 Dec 2020 03:15 AM

ரஜினியை அரசியலுக்கு வரவேற்று வீடுகளில் பச்சை கொடியேற்ற அழைப்பு

திருநெல்வேலி

ரஜினிகாந்த் ரத்ததான கழக நிறுவனர் வெங்காடம்பட்டி பூ.திருமாறன் திருநெல் வேலியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ரஜினிகாந்தின் 71-வது பிறந்த நாள் டிசம்பர் 12-ல் கொண்டாடப் படுகிறது. அரசியல் மாற்றத்தை சாதாரண மக்களைப் போலவே ரஜினியும் விரும்புகிறார். அதனால்தான் அரசியலுக்கு வருகிறார். அவரது அரசியல் வருகையை இந்த பிறந்த நாளில், ரஜினிகாந்த் தொண்டர்கள் வித்தியாசமாக கொண்டாட உள்ளனர். தமிழகம் முழுவதும் பச்சைக் கொடியை வீடுகளில், தெருக்களில் பறக்கவிட்டு ரஜினியின் அரசியல் வருகையை வரவேற்க திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுமக்களும், ரஜினியின் அபிமானிகளும் பச்சை கொடியேற்ற அன்புடன் அழைக் கிறோம். வாக்களிக்க நாங்கள் தயார் என்ற நம்பிக்கையை இதன்மூலம் சூசகமாக ரஜினிக்கு தெரியப்படுத்த வேண்டும். சிவப்பு கம்பள வரவேற்புபோல் இது பச்சை கம்பள வரவேற்பு. ரஜினியின் தரப்பிலிருந்து விரைவில் நல்ல செய்தியை இந்த நாடு கண்டிப்பாக எதிர்பார்க்கலாம். மேலும், ரஜினியின் அரசியல் வருகையை ஆதரித்து அஞ்சல் அட்டைகளை லட்சக்கணக்கில் தமிழகம் முழுவதும் இருந்தும் அனுப்பி வைக்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

ரஜினிகாந்த் ரத்ததான கழகம் கடந்த 1987-ல் வெங்காடம்பட்டியில் தொடங்கப்பட்டது. இதுவரை 3003 ரத்ததான முகாம்களை நடத்தியுள்ளோம். 3,0,6000 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். இவ்வாண்டு வரும் 6-ம் தேதியிலிருந்தே ரத்ததான முகாம்கள் நடத்தப்படவுள்ளது என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x