Published : 02 Dec 2020 03:16 AM
Last Updated : 02 Dec 2020 03:16 AM
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே மழை குறைந்து வருவதற்கான காரணங் களை கண்டறிய குழு அமைக்க வேண்டும் என புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப் பட்டுள்ளது.
புதுக்கோட்டை ஆட்சியர் அலு வலகத்தில் இருந்து காணொலி மூலம் மாவட்ட அளவிலான விவ சாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
இந்திய விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ஜி.எஸ்.தனபதி: காவிரி-குண்டாறு இணைப்பு திட்ட பணிகளை விரைவு படுத்த வேண்டும். கேரளா மாநிலத் தில் உள்ளதுபோல விவசாய பணி களுக்கும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பணியாளர் களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். அரசு சார்பில் நெல் அறுவடை இயந்திரம் வாங்க வேண்டும்.
மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு கடந்த 2010-ல் 945 மில்லி மீட்டராக இருந்தது. 2015-ல் 915 மிமீ ஆகவும், தற்போது 710 மிமீ ஆகவும் குறைந்துள்ளது. படிப்படியாக மழையளவு குறைந்து வருவதற்கான காரணங்களை கண்டறிய வல்லுநர்களைக் கொண்டு குழு அமைக்க வேண் டும். இதேபோன்று, ஒவ்வொரு மாதமும் மழை அளவை மட்டுமே தெரிவிக்காமல் ஏரி, குளங்களில் உள்ள நீர் இருப்பு விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.
தெற்கு வெள்ளாறு பாசனதாரர் கள் சங்கத் தலைவர் ஆர்.துரை மாணிக்கம்: கல்லணைக் கால்வாய் வழியே புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வரும் காவிரி நீரை திருப்புனவாசல் போன்ற பகுதிகள் வரை நீட்டிப்பதற்கான திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
விவசாயி வி.ராஜசேகர்: பண்ணைக் குட்டை அமைப்பதற் கான அளவை குறைத்து எண்ணிக் கையை அதிகரித்தால் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சி.சோமையா: காவிரி- குண்டாறு இணைப்பு திட்டம் தொடர்பாக நடத்தப் படும் ஆலோசனைக் கூட்டங்கள் குறித்த தகவல்களை அனைத்து விவசாயிகள் சங்க பிரதிநிதிக ளுக்கும் தெரிவிக்க வேண்டும்.
தென்னை உற்பத்தியாளர் நிறுவனத் தலைவர் சுப்பையா: மாவட்டத்துக்கு வேளாண் இயந்தி ரங்களின் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.
ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி பேசியது: விவசாயிகளுக்குத் தேவையான உரம், இடு பொருட்கள் தடையின்றி விநியோகம் செய்யப்பட்டு வரு கின்றன. விவசாயிகள் உரிய காலத்தில் பயிர்க் காப்பீடு செய்ய வேண்டும். மற்ற கோரிக் கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT