Published : 01 Dec 2020 09:31 PM
Last Updated : 01 Dec 2020 09:31 PM
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கான இடஒதுக்கீட்டு சலுகையில் அரசுப்பணிக்கு சேர்ந்தவர்கள் பட்டியலை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி பணி நியமனத்தில் தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டு சலுகையை தொலை நிலைக்கல்வியில் படித்தவர்களுக்கு வழங்காமல் நேரடியாக தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு வழங்கக்கோரி திருமங்கலத்தைச் சேர்ந்த சக்திராவ் உயர் நீதிமன்ற கிகைளயில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டு சலுகையை முறைப்படுத்துவது தொடர்பான சட்டத்திருத்த மசோதா கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
பின்னர், தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கான இடஒதுக்கீட்டு அடிப்படையில் அரசுப் பணிக்கு தேர்வானோர் பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை டிச. 4-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT