Published : 29 Nov 2020 03:13 AM
Last Updated : 29 Nov 2020 03:13 AM

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி அகல் விளக்குகள் விற்பனை விறுவிறுப்பு

கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பாளையங்கோட்டை தினசரி சந்தையில் அகல்விளக்குகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.(வலது) தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் போட்டி போட்டு பூக்களை வாங்கிய சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள். படங்கள்: மு.லெட்சுமி அருண். என்.ராஜேஷ்

தென்காசி/ தூத்துக்குடி

கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. தீபத் திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் அகல் விளக்குகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. தள்ளுவண் டிகளிலும், சாலையோரங்களிலும் ஏராளமான வியாபாரிகள் அகல் விளக்குகளை குவித்து வைத்து விற்பனை செய்தனர். பொதுமக்கள் ஆர்வத்துடன் அகல் விளக்குகளை வாங்கிச் சென்றனர்.

இதுகுறித்து தென்காசியைச் சேர்ந்த வியாபாரி சீனிவாசன் கூறும்போது,

“தென்காசி மாவட்டத்தில் தேன்பொத்தை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் அகல் விளக்குகளை மொத்தமாக வாங்கி விற்பனை செய்கிறோம். சாதாரண விளக்குகள் 4 எண்ணம் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டிசைன் விளக்குகள் ஒன்று 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப் படுகிறது- கர்நாடக மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட அகல் விளக்குகள் பல்வேறு வடிவங்களில் இயந்திரங்களால் நேர்த்தியாக தயாரிக்கப்பட்டவை.

விநாயகர் விளக்கு 250 ரூபாய்க்கும், லட்சுமி முகத்துடன் கூடிய விளக்கு 300 ரூபாய்க்கும், பாவை விளக்கு 80 முதல் 200 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

கார்த்திகை தீபத் திருவிழாவுக் காக ஒரு நாள் மட்டும் விளக்கேற்ற சாதாரண விளக்குகளையும், வீட்டு பூஜையறையில் விளக்கேற்ற பல்வேறு வடிவங்களில் செய்யப் பட்ட விளக்குகளையும் மக்கள் வாங்கிச் செல்கின்றனர்” என்றார்.

கொழுக்கட்டை தயாரிப் பதற்காக பனை ஓலை குருத்துகள் விற்பனையும் விறுவிறுப்பாக நடை பெற்றது. மேலும், இன்று இரவில் சொக்கப்பனை ஏற்றுவதற்கான ஏற்பாடுகளையும் பல்வேறு இடங்களில் செய்துள்ளனர்.

தூத்துக்குடி

தென் மாவட்டங்களில் தீபத் திருவிழாவன்று பனை ஓலை கொழுக்கட்டை தயாரித்து சுவாமிக்கு படைப்பது வழக்கம். இதன் பொருட்டு தூத்துக்குடி நகரின் பல்வேறு பகுதிகளில் பனை ஓலைகள் குவித்து வைத்து விற்பனை செய்யப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்த இந்த பனை ஓலைகள் அளவுக்கு ஏற்ப ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டன.தூத்துக்குடி பூ மார்க் கெட்டில் பூக்களின் விற்பனையும் அமோக மாக நடைபெற்றது. விலை கடுமை யாக உயர்ந்திருந்த போதிலும் பூக்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x