Published : 18 May 2014 12:38 PM
Last Updated : 18 May 2014 12:38 PM

புதுவைக்கு மோடி கண்டிப்பாக உதவுவார்: முதல்வர் ரங்கசாமி நம்பிக்கை

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டு நடை பெற்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை பிடித்தது. தற்போது மக்களவைத் தேர்தலிலும் அந்த கட்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. சட்டப்பேரவை வளாகத்திலுள்ள தனது அறையில் முதல்வர் ரங்க சாமி சனிக்கிழமை அளித்த பேட்டி:

உங்கள் கட்சி வேட்பாளர் 60,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என எதிர்பார்த்தீர்களா?

நிச்சயமாக நினைத்தேன். பா.ஜ.கவுடன் கூட்டணி சேர்ந்ததும், நரேந்திர மோடி அலை வீசியதும், என்.ஆர். காங்கிரஸ் அரசின் செயல் பாடு மீது மக்கள் வைத்த நம் பிக்கையும் நாங்கள் வெற்றி பெறக் காரணமாகும்.

என்.ஆர். காங்கிரஸ் கட்சியை அமோக வெற்றி பெறச் செய்த வாக்காளர்கள், கட்சி நிர்வாகிகள், பா.ஜ.கவினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அமோக வெற்றி தேடித்தந்த நரேந்திர மோடிக்கு புதுவை மக்கள் சார்பில் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். அவரது தலைமையில் இந்தியா பல்வேறு முன்னேற்றங்களை பெறும்.

புதுச்சேரி இனி முன்னேற்றமடையுமா?

மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களும் மக்களை சென்று அடைய தேவையான நிதி பெறுவோம். இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் சம மாக பாவிப்பேன் என மோடி கூறியுள்ளார். அவரது ஆட்சியில் புதுச்சேரி பிரதேசம் சிறப்பான முன்னேற்றத்தை அடையும்.

நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பீர்களா?

நரேந்திர மோடியை விரைவில் சந்திப்பேன். முதலில் வாழ்த்து தெரிவிப்பேன். பிறகு, புதுச்சேரி மாநிலத்தில் நிலவும் நிதி நெருக்கடி, கடன் சுமை ரத்து, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து கோரிக்கை வைப்போம்.

புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து கோரிக்கையை மத்திய அரசிடம் வலியுறுத்துவீர்களா?

புதுச்சேரி அனைத்து நிலை களிலும் ஏற்றம் பெற தனி மாநில அந்தஸ்து தேவை. மாநில அந்தஸ்து கோரிக்கை தொடர்பாக அனைத்துக்கட்சி பிரதிநிதிகளையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று மத்திய அரசிடம் கோரிக்கை வைப்போம். தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் அறிக்கையில் மாநில அந்தஸ்து தொடர்பாக குறிப்பிட்டிருந்தனர். அதனால் கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவையில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ராதா கிருஷ்ணன் இடம் பெற முயற்சி மேற்கொள்ளப்படுமா?

மத்திய அமைச்சரவையில் எங்கள் கட்சி வேட்பாளர் இடம் பெற்றால் மகிழ்ச்சி தான். இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்துக்கு மேலும் பல்வேறு நல்ல திட்டங் களை கொண்டு வர முடியும். தடைபட்டுள்ள அனைத்து மாநில அரசு திட்டங்களையும் நிறைவேற்றுவதில் தீவிர கவனம் செலுத்துவோம் என்றார் ரங்கசாமி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x