Published : 27 Nov 2020 07:09 AM
Last Updated : 27 Nov 2020 07:09 AM
தமிழகத்தில் அடுத்தக்கட்ட கரோனா ஊரடங்கு நீட்டிப்பு, தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து, அடுத்தடுத்து பல்வேறுதளர்வுகள், வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு முறை ஊரடங்கை நீட்டிக்கும்போது, மத்திய அரசின் அறிவிப்பு, மருத்துவ நிபுணர்கள் குழுவின் ஆலோசனை, மாவட்ட ஆட்சியர்கள் தெரிவிக்கும் மாவட்டநிலைமை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பொதுமக்கள் வாழ்வாதாரம், பொருளாதார மீட்பு இவற்றைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு, தற்
போது பெருமளவு இயல்பு நிலைக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் கீழ்குறைந்துள்ளது. கரோனா இறப்
பும் வெகுவாகக் குறைந்து, குணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே, கரோனா பாதிப்பு அதிகமுள்ள 8 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர்மோடி, 2 தினங்களுக்கு முன்பு
காணொலி வாயிலாக உரையாடினார். அப்போது, கரோனா குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு தொடர்ந்து ஏற்படுத்தும்படி முதல்
வர்களை கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், 10-ம் கட்ட ஊரடங்கு, 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. 11-வது கட்டமாக ஊரடங்குநீட்டிப்பு, தளர்வுகள் குறித்து, தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி, நாளை (நவ.28)காலை மாவட்ட ஆட்சியர்களுடனும், தொடர்ந்து பிற்பகலில் மருத்
துவ நிபுணர்கள் குழுவினருடனும் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் நவ.16-ம் தேதிபள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT