Published : 26 Nov 2020 06:54 AM
Last Updated : 26 Nov 2020 06:54 AM
தீவிர நிவர் புயல் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புதுச்சேரி வடக்கே முழுமையாக கரையை கடந்தது.
அதி தீவிரப் புயலாக (Very Severe Cyclonic Storm) இரவு 10 மணி அளவில் நிவர் புயல் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதுச்சேரிக்கு கிழக்கே தென்கிழக்கே சுமார் 55 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 130 கி.மீ. தொலைவிலும், கடலூருக்குத் தென்கிழக்கே சுமார் 80 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.
பின்னர் அது நகர்ந்து புதுவைக்கு வடக்கே நேற்று இரவு 11.30 மணி அளவில் கரையைக் கடக்கத் தொடங்கியது. புதுச்சேரிக்கு வடக்கே 11.30 மணி முதல் 2.30 வரை நிவர் புயல் முழுவதுமாக கரையை கடந்துவிட்டது. தீவிர புயலாக வலுவிழந்த நிவர் புயல் கரையை கடந்துள்ளது. புயல் கரையை கடந்த நேரத்தில் புதுச்சேரி உள்பட சில பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழையும் பெய்தது.
#WATCH Tamil Nadu: Mahabalipuram braves strong winds, landfall process of #CycloneNivar continues.
Centre of Nivar moved NW with a speed of 16 kmph during past 6 hrs, lying 45 km E-NE of Cuddalore & 30 km east of Puducherry. It'll cross coast near Puducherry within next 2 hours. pic.twitter.com/pDqambd8Fs
இதனை தொடர்ந்து, நிவர் புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து சென்றது. நிவர் புயல் கரையைக் கடந்த நிலையில் புதுவை மற்றும் கடலூர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் நகரம் மற்றும் புதுவையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT