Published : 10 Mar 2014 12:00 AM
Last Updated : 10 Mar 2014 12:00 AM

பாஜக கூட்டணியில் சிக்கல்: மதிமுக, பாமக அதிருப்தி; தேமுதிக விட்டுக்கொடுக்காததால் இழுபறி

பாஜக, தேமுதிக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு எண்ணிக்கையை இன்னும் இறுதி செய்ய முடியாததால், திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

14 தொகுதிகள் ஒதுக்கியே ஆக வேண்டுமென்று, தேமுதிக குழுவினர் பிடிவாதமாக உள்ளார் களாம். மீதமுள்ள 26 தொகுதிகளில் பாஜக 9, பாமகவுக்கு 9 மற்றும் மதிமுகவுக்கு ஐந்து, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக்கட்சி உள்ளிட்டவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கலாம் என தேமுதிகவினரே ஆலோசனை தருகிறார்களாம்.

முதற்கட்டப் பேச்சில், பாமக 10 தொகுதிகள் கட்டாயம் வேண்டு மென்று பாஜகவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மதிமுக 12 தொகுதிகள் பட்டியலைக் கொடுத்து, அதில் 10 தொகுதி களாவது வேண்டுமென கேட்டு வருகிறது.

பாஜகவும் மோடி அலையைப் பயன்படுத்தி தமிழகத்தில் 10 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டுமென்று, பாஜக மேலிடம் உத்தரவிட் டுள்ளதாம். பாமக தரப்பில் விசாரித்தபோது, ’நாங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ள 10 தொகுதிகளில், எட்டு தொகுதி களை அப்படியே ஒதுக்க வேண்டுமென்று கேட்டுள்ளோம். எண்ணிக்கை குறைந்தாலும், கேட்கும் தொகுதிகள் வேண்டு மென்று பேசி வருகிறோம் எனத் தெரிவித்தனர்.

இதற்கிடையில் மதிமுகவினர் தான் மிகவும் அப்செட்டான நிலையில் உள்ளனர். அவர் களுக்கு ஐந்து தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்பது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துமென்று, கட்சி தலைமையிடம் நிர்வாகிகளே கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மதிமுக நிர்வாகிகள் சிலர், ‘எங்களின் கவுரவத்துக்கு பங்கம் இல்லாத வகையில், ஏழு தொகுதிகள் நிச்சயம் வேண்டு மென வலியுறுத்தியுள்ளோம். தேமுதிக மற்றும் பாமகவைவிட அதிக மாவட்டங்களில் வளர்ந் துள்ள மதிமுகவை குறைத்து எடைபோடக் கூடாது என்பதை தெரிவித்து விட்டோம். எங்களுக்கு குறைந்த தொகுதிகள்தான் வழங்கப்படும் என்று பாஜக நினைத்தால், மதிமுக எந்த முடிவுக்கும் தயங்காது என்பதை தெரிவித்துள்ளோம்’ என்றனர்.

தொகுதிகள் எண்ணிக்கையை குறைக்க, ஞாயிற்றுக்கிழமை வரை தேமுதிக முன்வரவில்லை என்பதால், மதிமுக மற்றும் பாமகவுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x