Published : 15 Oct 2015 10:21 AM
Last Updated : 15 Oct 2015 10:21 AM
ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவர், தனது ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை மாதந்தோறும் அரசு நூலகத்தில் பழைய புத்தகங்களை பைண்டிங் செய்து புத்தம்புதிய புத்தகங்கள்போல் மாற்றி, அடுத்த தலைமுறையினருக்காக பாதுகாத்து வருகிறார்.
மதுரை அருகே திருநகரில் அரசு கிளை நூலகம் செயல்படுகிறது. இதில் 52 ஆண்டுகளுக்கு முந் தைய பழைய புத்தகங்கள் முதல் சமீபத்தில் வெளியான சமையல் குறிப்புகள், ஐஏஎஸ்., ஐபிஎஸ் உள்ளிட்ட போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள்வரை மொத்தம் 58 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. மதுரை சிம்மக்கல் மைய நூலகத் துக்கு அடுத்து, மாவட்டத்தில் 2-வது பெரிய நூலகமான இந்த நூலகம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படுகிறது. நூலகத்தின் கீழ் தளத்தில் வாசகர்கள் படிப் பதற்கு காற்றோட்டமான இடவசதி உள்ளது. மேல்தளத்தில் போட் டித் தேர்வுக்குத் தயாராகும் மாண வர்கள் எந்த இடையூறும் இல் லாமல் அமர்ந்து படிப்பதற்கான அமைதியான சூழலில் படிப்பகமும் உள்ளது. மாணவர்கள், போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளை ஞர்கள், மூத்த குடிமக்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் தினமும் புத்தகங்கள், நாளிதழ்கள் படிக்க இங்கு வருகின்றனர்.
பொதுவாக நூலகங்களில் வாச கர்கள், மாணவர்கள் அடிக்கடி படிக்க எடுத்துச் சென்று புத்தகங்கள் கிழிந்து கந்தல்கோலமாக காணப் படும். அதுபோல், இந்த நூலகத் திலும் கடந்த காலத்தில் பழுப் பேறிய தாள்களுடன், கரையான் அரித்த பழைய புத்தகங்கள் கிழிந்து வாசகர்கள் படிக்க முடியாதபடி மூலையில் முடங்கிக் கிடந்தன. தற்போது, இந்த நூலகத்தில் உள்ள பழைய, புதிய புத்தகங்களை பைண்டிங் செய்து புத்தம் புதிதாக, மாணவர்கள், இளைஞர்கள், வாச கர்களை படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளன. ஒவ்வொரு புத்தகத்திலும் வாசகர்கள் எளிதாக அடையாளம் கண்டு எடுத்து படிக்க வசதியாக அந்த புத்தகத்தின் பெயர், பக்க எண் காட்டியுடன், எலக்ட்ரானிக் நூலகம்போல் மற்ற நூலகங்களுக்கு முன்னுதாரண மாக இந்த நூலகம் செயல்படுகிறது. அதனால், புத்தகங்களை எடுத்துச் செல்பவர்கள் அவற்றை கிழியா மல் பாதுகாப்பாக பயன்படுத்துகின் றனர். இந்த மாற்றத்துக்கு காரணம் திருநகர் பாலசுப்பிரமணி நகரை சேர்ந்த எம்.ராமலிங்கம்.
ஓய்வுபெற்ற அரசு வேளாண் பொறியியல் பிரிவு ஊழியரான இவர், மாதந்தோறும் தனது ஓய்வூ யத்தின் ஒரு பகுதியைக் கொண்டு இந்த நூலகத்தில் உள்ள சேத மடைந்த பழைய புத்தகங்களை பைண்டிங் செய்து கொடுத்து வருகிறார். கடந்த 8 ஆண் டாக, இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழைய புத்தகங்களை பைண்டிங் செய்து, அடுத்த தலை முறையினரும் படிக்க உதவி செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் ‘தி இந்து’ விடம் கூறியதாவது: அரசு பணியில் இருந்தபோது தேவையான அளவு ஊதியம் பெற்றேன். தற்போது ஓய்வூதியம் பெறுகிறேன். அதனால், எனது வருவாயில் ஒரு பகுதியை அரசுக்கு திருப்பிக் கொடுக்க நினைத்தேன். இந்த நூலகத்தின் பழைய புத்தகங்களைப் பாதுகாப் பதன் மூலம் எனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கிறேன்.
புத்தகங்களை அடுத்த தலைமுறைக்காக பாதுகாப்பது நமது கடமை. எனது உயிர் இருக்கிற வரையும் பழைய புத்தகங்களுக்கு உயிர் கொடுக்கும் பணியை மேற்கொள்வேன் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT