Published : 11 Oct 2015 10:28 AM
Last Updated : 11 Oct 2015 10:28 AM
சிவகங்கை சிறுமி விவகாரத்தில் உறவுகளின் எல்லை வரைமுறையை மீறி நடந்த பாலியல் பலாத்கார சம்பவம் குறித்து திருநெல்வேலியைச் சேர்ந்த மனநல மருத்துவர் ஆ.காட்சன் கூறியதாவது:
ரத்த சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களிடையே காணப் படும் பாலியல் ரீதியான உறவு கள் ‘இன்செஸ்ட்’ (incest) என்று அழைக்கப்படும். இதுவே ஒரு நபரின் விருப்பத்துக்கு மாறாக நடத்தப்பட்டால் அது பாலியல் பலாத்காரம். பெரும்பாலும் இந்த அரிதான இன்செஸ்ட் சம்பவங் கள் தந்தை-மகள், தாய்-மகன், சகோதரன்-சகோதரி உறவுகளுக் குள் நடக்க வாய்ப்புள்ளது.
இதுபோன்ற தடம்மாறும் உறவுகளை பொறுத்தவரையில் நமது கலாச்சாரத்துக்கும், மேற் கத்திய நாடுகளின் கலாச்சாரத்துக் கும் பெரிய வித்தியாசம் உள் ளது. மேற்கத்திய நாடுகளில் நடைபெறும் அதிகப்படியான விவாகரத்துகளைத் தொடர்ந்து, இருபாலினருமே அங்கு மறு மணம் செய்துகொள்வது சாதாரண விஷயம்.
நமது கலாச்சாரத்தைப் பொறுத் தவரை பெற்றோரில் யாராவது ஒருவரை இழந்த நிலையில், ஒருவரின் பராமரிப்பில் மட்டும் வளரும் குழந்தைகள்தான் அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர். சில நேரங்களில் ஒரு குறிப்பிட்ட வயது வரை தாத்தா, பாட்டியின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டு, பின்னர் தந்தையின் பராமரிப்பில் வளரும் பெண் குழந்தைகள் இந்தப் பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர்.
சரியான பாசம் மற்றும் புரிந்துகொள்ளுதல் இல்லாமை, உறவுகளின் எல்லை வரைமுறைகளில் ஏற்படும் குழப்பம், தனிமையான சூழல் உட்பட பல சந்தர்ப்பங்கள் வாய்ப்பை ஏற்படுத்துகின்றன. இதில் முக்கிய காரணமாக அமைவது குடி மற்றும் போதைப் பழக்கங்கள்தான். போதையின் உந்துதலில் நிலைதடுமாறி வரம்புமீறுதல் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. ஆபாசப் படங்களின் தூண்டுதலும் ஒரு காரணமாக இருக்கலாம்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT