Published : 06 Oct 2015 07:57 AM
Last Updated : 06 Oct 2015 07:57 AM
மலேசியாவில் வேலை எனக்கூறி சவூதி அரேபியா அழைத்துச் செல்லப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த பெண், அங்கு கொத்தடி மையாக சிக்கித் தவிக்கிறார். செல்போன் மூலம் 'தி இந்து'வை தொடர்பு கொண்ட அவர், தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் தன்னை எப்படியாகவது காப் பாற்றும்படியும் கதறினார்.
தூத்துக்குடி மாவட்டம், மேட்டுப் பட்டியைச் சேர்ந்தவர் கணேசம் மாள். இவரது கணவர் 20 ஆண்டு களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு முருகேஸ்வரி(42), தமிழ்செல்வி(40), ராஜேஸ்வரி(35), கலாதேவி(33) ஆகிய 4 மகள்களும் சரவணன்(32), முத்துக்குமார்(31) என 2 மகன்களும் உள்ளனர். இவர் களில் தமிழ்செல்வி, முத்துகுமா ருக்கு மட்டும் திருமணம் நடை பெறவில்லை. தமிழ்செல்வி வீட்டு வேலை செய்து வந்தார். தங்கை களை திருமணம் செய்து வைப் பதற்காக இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.
கடந்த 5 மாதங்களுக்கு முன், அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மூலம் மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியத் துக்கு சவுதிஅரேபியாவில் ஒரு வீட்டில் குழந்தைகளை பார்த்துக் கொள்ள தமிழ்செல்வி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மகள் சவுதி அரேபியா சென்றதால் கணேசம் மாள், மூத்த மகள் முருகேஸ்வரி யுடன் தற்போது மதுரையில் வசிக்கிறார். சவுதிஅரேபியாவில் அல்ஹயல் என்ற பகுதியில், 3 வீடு களில் தமிழ்செல்வி வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார். அங்கு 14 மணி நேரம் தொடர்ந்து ஓய்வே இல்லாமல் குழந்தைகளை பராம ரிப்பது, துணி துவைப்பது, சமையல் செய்வது, தண்ணீர் எடுப்பது, மண், கல் சுமப்பது உள்ளிட்ட கொத்தடிமை வேலைகளில் ஈடு படுத்தப்பட்டுள்ளார்.
ஒரு வீட்டில் மட்டும் வேலை செய்ய எனக் கூறி அழைத்துச் சென்று 3 வீடுகளில் வேலை செய்யச் சொல்லி, அவரை கொடுமைப்படுத்துவதாகக் கூறப் படுகிறது. இதுகுறித்து அங்கு சென்ற சில நாட்களிலேயே யாருக்கும் தெரியாமல் செல்போன் மூலம் தனது தாய், அக்கா, தங்கைகளை தொடர்புகொண்டு தன்னை எப்படியாவது மீட்கும்படி தமிழ்செல்வி கதறி அழுதுள்ளார்.
உடனே கணேசம்மாள் அவரது உறவினர்கள், தமிழ்செல்வியை அழைத்துச் சென்றவர்களிடம் முறையிட்டுள்ளனர். அவர்கள் 3 ஆண்டுகள் கழித்துதான் உனது மகளை அழைத்து வர முடியும் எனக் கைவிரித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கணேசம்மாள், தனது மகளை மீட்டுத் தரும்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், சென்னை வெளிநாடுவாழ் தமிழர் கள் நல ஆணையரகம் ஆகியோரி டம் மனு அளித்தார். ஆனால், தற்போது வரை சவுதிஅரேபியா வில் தவிக்கும் தமிழ்செல்வியை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை.
துன்புறுத்தல்
சவுதிஅரேபியாவில் இருந்து தமிழ்செல்வி ‘தி இந்து’விடம் செல் போனில் பேசும்போது “எப்படியா வது என்னைக் காப்பாத்துங்க. இங்க ரொம்ப கஷ்டமா இருக்கு. என்னால இருக்க முடியல. கையைப் பிடிச்சு முறுக்குறாங்க, கன்னத்துல அடிக்கிறாங்க. மூனு வீட்டுக்கும் சேர்த்து வேலை பார்க்கச் சொல்றாங்க.
சின்னக் குழந்தைகளெல்லாம் என்ன அடிக்கிறாங்க. அதை யாரும் தட்டிக் கேட்க மாட்டேன்றாங்க, கொளுத்துற வெயிலுல மண், கல்ல அள்ளச் சொல்றாங்க. என்னால உட்காரக்கூட முடியல. சாகப் போற நிலையில இருக்கிறேன், பயமாக இருக்கு’’ என்றார்.
மகளை மீட்க தாய் வேண்டுகோள்
தமிழ்செல்வியின் தாய் கணேசம்மாள் கூறும்போது, மலேசியாவுக் குன்னு சொல்லித்தான் அழைச்சுட்டுப் போனாங்க. ஆனா, சவுதி அரேபியாவுக்கு கொண்டுபோய் அங்க என் மகள மூனு, நாலு வீட்டுல வேலை செய்யச் சொல்லி அடிச்சு துன்புறுத்துறாங்க. ஒழுங்கா சாப்பாடும் கொடுப்பதில்லையாம். ஒரு வாரமா உடம்பு சரியில்ல, டாக்டருட்ட அழைச்சுட்டுப் போக ஆள் இல்லை. அவுங்க கொடுமயத் தாங்காம போன்லயே அழுறா, கலெக்டருட்டையும் மனு கொடுத்தாச்சு. சென்னைக்கும் போய் சொல்லியாச்சி, இனி யாருட்ட போய் சொல்றதுன்னு தெரியல, எனது மகளக் காப்பாத்த உதவுங்க என அழுதார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT