Published : 22 Nov 2020 03:15 AM
Last Updated : 22 Nov 2020 03:15 AM
தமிழகத்தில் நேற்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நிலைய வாக்குச்சாவடி முகாம்களில் நடைபெற்றது.
இந்த முகாம்களில் பங்கேற்ற வாக்குச்சாவடி நிலைய அலுவ லர்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, முகவரிமாற்றம், நீக்குதல் போன்றவைக் கான விண்ணப்பம் அளிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பத்தை பெற்றுக் கொண்டனர்.
இளைஞர்கள் பலர் ஆர்வத் துடன் விண்ணப்பத்தை வாங்கிபூர்த்தி செய்து திரும்ப அளித்த னர். அதேநேரத்தில் பெயர் சேர்ப்பதற்காக வந்திருந்த வயதான வர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய தெரியாமல், அங்கு வந்திருந்த இளைஞர்களிடம் உதவிகோரினர். முகாமிற்கு வந்திருந்த வர்கள் தரையில் அமர்ந்து விண் ணப்பத்தை பூர்த்தி செய்வதையும் காண முடிந்தது.
“வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் பட்டியலில் பெயர் இல்லை. கடந்த முறை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண் ணப்பித்தேன், ஆனால் பெயர் இடம்பெறவில்லை. ஒவ்வொரு முறையும் விண்ணப்பம் செய்யும் போதெல்லாம், போட்டோ எடுக்க, குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை நகல் எடுக்க என ரூ.50 செலவானது தான் மிச்சம்” என்று வேப்பங்குறிச்சியைச் சேர்ந்த அஞ்சலை என்ற மூதாட்டி வருத்தம் தெரிவித்தார்.
பொதுவாக இதுபோன்ற முகாம்கள் நடைபெறும் போது, அந்தப் பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சியினர், குறிப்பாக திமுக,அதிமுக பிரதிநிதிகள் கலந்து கொண்டு, வருவோருக்கு உதவிகரமாக செயல்படுவது என கடந்த முகாம்கள் வரை காண முடிந்தது. தற்போது நடைபெற்ற முகாம்களில் அதுபோல் எவரையும் காண முடியவில்லை.
வாக்குச்சாவடி நிலைய அலுவ லர்களிடம் விசாரித்த போது, “ஒவ்வொரு முறையும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பெற்று, வருவாய் துறையில் ஒப்படைப்போம்.
அந்த விண்ணப் பங்களில் 30 சதவிகித விண்ணப் பத்தை ஏற்பதே அரிதாக உள்ளது. மக்களின் சிரமத்தை நாங்கள்உணர்கிறோம். ஆனால் அலுவல கத்தில் உள்ள வருவாய் துறையினர் அதைக் கண்டுகொள்வதே இல்லை” என ஆதங்கப்பட்டனர்.
வாக்காளர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாவட்ட ஆட்சியர்கள், கள நிலவரத்தை உணர்ந்து, முகாம்களுக்கு வரும் மக்களுக்கு உதவ தன்னார்வலர்கள், அமர இருக்கை, விண்ணப்பத்தில் போட் டோவை ஒட்ட பசை உள்ளிட்ட சில மிக அடிப்படையான வசதிகளை செய்து கொடுக்க முன்வந்தால், இந்த சிறப்பு முகாம்கள் உண்மையில் பயனளிக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT