Published : 18 Nov 2020 05:19 PM
Last Updated : 18 Nov 2020 05:19 PM
மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவர் முகமது இஸ்மாயில் மரணம் அடைந்தார்.
ஜனதாதளம் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் முகமது இஸ்மாயில்(94). இவர் 1956ம் ஆண்டு குளச்சல் நகராட்சி தலைவராகவும், 1980ம் ஆண்டு பத்மநாபபுரம் தொகுதியில் ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு சாதி, மத பேதமின்றி அனைவரின் அன்பை பெற்றவர் என்ற பெருமை முகமது இஸ்மாயிலுக்கு உண்டு.
மூத்த அரசியல்வாதியான இவர் வயது முதிர்வால் தக்கலையில் உள்ள அவரது வீட்டில் சில நாட்களாக படுக்கையில் இருந்து வந்தார்.
நேற்று இரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து நெய்யாற்றின்கரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் நள்ளிரவில் மரணமடைந்தார்.
முகமது இஸ்மாயிலின் சொந்த ஊர் குளச்சல். அவருக்கு மனைவி, மற்றும் மகள் உள்ளனர். முகமது இஸ்மாயிலின் மரணத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம், மற்றும் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT