Published : 18 Nov 2020 07:15 AM
Last Updated : 18 Nov 2020 07:15 AM

பயணிகள் அதிகமாக வரும் ரயில் நிலையங்களில் இலவச மருத்துவ உதவி மையம் திறக்க கோரிக்கை: நடவடிக்கை எடுப்பதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் 

சென்னை 

அவசரகால மருத்துவ வசதி பெற சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் இருப்பதுபோல், பயணிகள் அதிகமாக வரும் மற்ற ரயில் நிலையங்களிலும் இலவச மருத்துவ உதவி மையம் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய ரயில் நிலையங்களில் தனியார் பங்களிப்புடன் பயணிகளுக்கான வசதிகளை தெற்கு ரயில்வே மேம்படுத்தி வருகிறது. குறிப்பாக, ஓய்வு அறை, லிஃப்ட் வசதி, எஸ்கலேட்டர் வசதி, சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படுகின்றன. இதேபோல முக்கிய ரயில் நிலையங்களில் அவசரகால மருத்துவஉதவி மையம் நிறுவப்படஉள்ளது.

சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் மட்டும் இலவச மருத்துவ உதவி மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்களில் முதலுதவி அளிக்க தேவையான மருந்துகளும், சிகிச்சை முறைகளும் உள்ளன. அங்கு ஒரு மருத்துவரும் 2 செவிலியர்களும் பணியாற்றுகின்றனர். பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் இந்த மருத்துவ மையங்களை மேலும் முக்கிய ரயில் நிலையங்களில் விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, “சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் மருத்துவ மையங்கள் இருப்
பதால் அவசர காலத்தில் உரியமருத்துவ சிகிச்சை பெற முடிகிறது. இதுபோன்ற வசதியை தாம்பரம், பெரம்பூர், மாம்பலம், வேளச்சேரி, செங்கல்பட்டு, அரக்கோணம் போன்ற ரயில் நிலையங்களிலும் செயல்படுத்த வேண்டும்’’ என்றனர்.

இதுகுறித்து தெற்கு ரயில்வேஅதிகாரிகள் கூறியதாவது: சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து தினமும் லட்ச
கணக்கானோர் பயணிக்கின்றனர். பயணிகளுக்கு திடீரென காயம், சுளுக்கு, மாரடைப்பு, மூச்சுத்திணறல் உட்படபல்வேறு திடீர் பாதிப்புகளுக்குமுதலுதவி தேவைப்படும். இதையடுத்து உடனடி மருத்துவசிகிச்சை தேவைப்படும் பயணிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், அதற்கானமுழு வசதிகளும் சென்ட்ரல்,எழும்பூர் ரயில்நிலையமருத்துவ உதவி மையத்தில் இருக்கின்றன.

நடைமேடைகள் மற்றும் ரயில்களில் இருந்து நோயாளிகளை அவசர உதவி மையத்துக்கு அழைத்து வருவதற்கு பேட்டரியில் இயங்கும் வாகனங்களும் தயார் நிலையில் இருக்கின்றன. இந்த மருத்துவ மையங்கள் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. அடுத்தகட்டமாக பயணிகள் அதிகமாக வரும் ரயில் நிலையங்களைத் தேர்வு செய்து, அங்கும் அவசரகால இலவச மருத்துவ உதவி மையங்களை தொடங்க உள்ளோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x