Published : 18 Nov 2020 03:13 AM
Last Updated : 18 Nov 2020 03:13 AM
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நேற்று தொடங்கியது.
இதையொட்டி, துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதேபோல், உற்சவருக்கும் நடைபெற்றது. தங்கக் கொடி மரத்தில் வரும் 20-ம் தேதி கொடியேற்றம் நடைபெற உள்ளது. அதன் பின்னர் 10 நாள் உற்சவம் நடைபெறுகிறது. வரும் 29-ம் தேதி பரணி தீபமும், மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
ஆன்லைனில் முன்பதிவு
கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கியுள்ளதால், சுவாமி தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்து அனுமதி பெறும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. நேற்று (17-ம் தேதி) முதல், விழா நடைபெறும் 17 நாட்களுக்கு 5 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. தீபத் திருவிழா நடைபெறும் 29-ம் தேதி பக்தர்களுக்கு அனுமதி இல்லை. www.arunachaleswarartemple.thhrce.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT