Last Updated : 17 Nov, 2020 11:53 AM

 

Published : 17 Nov 2020 11:53 AM
Last Updated : 17 Nov 2020 11:53 AM

நெல்லையில் தொடர் மழை: ஒரே நாளில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 9.7 அடி உயர்வு

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் மற்றும் மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக 143 அடி நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை ஒரே நாளில் 9.7 அடி உயர்ந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 111 அடியாக உள்ளது

அதேபோல 156 அடி நீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணை ஒரே நாளில் 18.5 அடி உயர்ந்து 118 அடியாக உள்ளது

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நேற்று ஒரே நாளில் பாபநாசம் பகுதியில் மட்டும் மழையின் அளவு 136 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளுக்கு வரும் நீரின் அளவு 9120 கனஅடியாக உயர்ந்துள்ளது.

மழை தொடர்ந்தால் அணை முழு கொள்ளலவை எட்ட வாய்ப்புள்ளது. இதனால், கரோயோரங்களில் வசிக்கும் மக்களுக்கு நெல்லை மாநகராட்சி சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

காவல்துறை எச்சரிக்கை:

இதேபோல், இன்றும் (17.11.2020) கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகள் இன்றி வெளியே செல்ல வேண்டாம்.

தாமிரபரணி கரையோரப் பகுதியில் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆறு மற்றும் குளம் ஆகிய பகுதிகளுக்குச் செல்லவிடாமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.

மழை நேரம் என்பதால் மின்சாதனங்கள் கையாள்வதில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். ஈரமான கைகள் கொண்டு மின் சாதனத்தை பயன்படுத்தக் கூடாது. குழந்தைகளை மின்சாதனம் அருகில் செல்ல அனுமதிக்கக் கூடாது.

மழைக்காலங்களில் சாலைகளில் அதிகமாக பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். மழைநீர் தேங்கிய பகுதிகளில் மிகவும் கவனமாகப் பயணம் செய்யு வேண்டும் என்று காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x