Published : 16 Nov 2020 05:50 PM
Last Updated : 16 Nov 2020 05:50 PM

100 வார்டுகளிலும் 100 சதவீதம் திறந்தவெளி கழிப்பிடம் இல்லை: மக்கள் கருத்து கேட்கிறது மதுரை மாநகராட்சி

மதுரை 

‘‘மதுரை மாநகராட்சி 100 வார்டுகளிலும் 100 சதவீதம் திறந்தவெளி கழிப்பிடம் இல்லை, என்று அறிவிக்கப்பட உள்ளது. ஆலோசனை மற்றும் ஆட்சேபனைகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம்,’’ என்று மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது :

மதுரை மாநகராட்சியைத் தூய்மையான சுத்தமான மாநகராட்சியாக மாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள நான்கு மண்டலங்களில் உள்ள 100 வார்டுகளில் பொதுமக்கள் அனைவரும் கழிப்பறைகளைத் தான் 100 சதவீதம் பயன்படுத்தி வருகின்றனர் என்றும், திறந்த வெளியினைg கழிப்பிடமாக பயன்படுத்துவது இல்லை என்றும், மதுரை மாநகராட்சியின் சார்பில் விரைவில் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.

எனவே பொதுமக்கள் இது தொடர்பாக தங்களது ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகள் ஏதேனும் இருப்பின் மதுரை மாநகராட்சி ஆணையாளருக்கு கடிதமாகவோ, mducorp@gmail.com மின்னஞ்சல் மூலமாகவோ, முகநூலிலோ, வாட்ஸ் அப் எண்.8428425000 எண்ணிலோ தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x