Published : 16 Oct 2015 01:50 PM
Last Updated : 16 Oct 2015 01:50 PM
மதுரை மாவட்டத்தில் உள்ள சீமாங் அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் நல மருத்துவர்கள் பற்றாக்குறையால் சிக்கலான பிரசவங்களில் தாய், சேய் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது.
மதுரை மாவட்டத்தில் உசிலம் பட்டி, திருமங்கலம் மற்றும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சீமாங் மருத்துவத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலூர் அரசு மருத்துவமனை இந்த திட்டத்துக்கு பரிந்துரைக்கப்ப ட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், தாய், சேய் மரணங்களைத் தடுக்க கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து பரிந்துரைக்கப்படும் கர்ப் பிணி பெண்களின் சிக்கலான மகப் பேறு பிரசவங்களுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க சீமாங் மருத்துவமனைகளில் மருத் துவர்கள், செவலியர்கள் குழு தயார் நிலையில் இருப்பார்கள்.
இந்த திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் ஒருங் கிணைந்து தமிழகத்தில் அனைத்து மாவட்ட ங்களிலும் கடந்த காலத்தில் தாய், சேய் மரணங்கள் அதிகளவு நடந்த தாலுகா மருத்துவமனைகளில் செயல்படுத்தி உள்ளன. இந்த சீமாங் அரசு மருத்துவமனைகளில் சிசு நல தீவிர சிகிச்சைப் பிரிவு வார்டும் இணைந்து செயல் படுத்தப்படுகிறது.
பிரசவ வார்டில் குழந்தை பிறந்ததும், ஆபத்தான நிலையில் இருந்தால் இந்த வார்டுக்கு (சிசுநல தீவிர சிகிச்சைப் பிரிவு) உடனடியாக மாற்றப்படுவார்கள். மருத்துவர்களுடைய தீவிர கண்காணிப்பில், இந்த வார்டில் பிரத்யேக இன்குபேட்டர், வென்டி லேட்டர், வார்மர் உள்ளிட்ட நவீன மருத்துவ சாதனங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கும். குழந்தை பிறக்கும் வரை கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய பொறுப்பு, இந்த மருத்துவமனையில் மகப் பேறு மருத்துவரை சார்ந்ததாக இருக்கும். குழந்தை பிறந்த அடுத்த நிமிடமே, குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய பொறுப்பு குழந்தைகள் நல மருத்துவரை சார்ந்ததாகிவிடும்.
சீமாங் அரசு மருத்துவ மனைகளில் 7 குழந்தைகள் நல மருத்துவர்கள் பணிபுரிய வேண்டும். 24 மணி நேரமும் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக்குழு தயார் நிலையில் இருக்க வேண்டும். ஆனால், தற்போது குழந்தைகள் நல மருத்துவர் பற்றாக்குறையால் சீமாங் அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகள், பிறக்கும் குழந்தை கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட் டுள்ளது.
இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆனந்தராஜ் கூறியதாவது:
சீமாங் மருத்துவமனைகளில் பெரும்பாலும் சிக்கலான பிரச வங்கள்தான் அதிகம் பார்க் கப்படுகிறது. 2014-ம் ஆண்டு உசிலம்பட்டி அரசு மருத்துவ மனையில் 1,194 அறுவை சிகிச்சை பிரசவங்களும், திருமங்கலம் அரசு மருத்துவமனையில் 556 பிரசவங்களும் நடந்துள்ளன. சிசு மரணங்களில் 80 சதவீதம் உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணம் மூச்சுத் திணறல். பல குழந் தைகளுக்கு மூச்சுத் திணறல் பாதிப்பு மூளை யையே செயலிழக்கச் செய்கிறது. ஒவ்வொரு சீமாங் அரசு மருத்துவமனையிலும் 2 குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ நிபுணர்களும், 3 குழந்தைகள் நல மருத்துவர்கள் உட்பட குழந்தைகள் சிகிச்சைக்காக மட்டுமே குறைந்தது 5 குழந்தைகள் நல மருத்துவர்கள் பணிபுரிய வேண்டும். ஆனால், உசிலம்பட்டியில் ஒரு குழந் தைகள் நல சிறப்பு மருத்துவ நிபுணரும், 2 குழந்தைகள் நல மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். திருமங்கலத்தில் ஒரே ஒரு குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ நிபுணர் மட்டுமே பணியில் உள் ளார், என்றார்.
இதுகுறித்து மதுரை மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் ருக்குமணியிடம் கேட்ட போது, சீமாங் மட்டுமில்லாது மாதம் 50 பிரசவத்திற்கு மேல் நடக்கும் மருத்துவமனைகள் அனைத்திலும் விரைவில் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவரை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.
விழிப்புடன் இருக்க வேண்டிய 5 நிமிடம்
சமூக ஆர்வலர் ஆனந்தராஜ் மேலும் கூறுகையில், குழந்தை பிறந்த ஒரு நிமிடத்துக்குள் மூச்சுவிட சிரமப்பட்டால் மூளைக்குச் செல்ல வேண்டிய ஆக்ஸிஜன் சரிவர கிடைக்காமல் மூளை பாதிக்கப்படும். இதனால், குழந்தைகளுடைய ஒவ்வொரு கட்ட வளர்ச்சியின்போதும் இயல்பாக செய்யக்கூடிய பார்த்து சிரிப்பது, சத்தம் கேட்டால் திரும்புவது, பொருட்களை கையில் பிடிப்பது போன்ற எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாத நிலை ஏற்பட்டு, மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளாக மாற வாய்ப்புள்ளது. குழந்தையின் இதயத் துடிப்பு நிமிடத்துக்கு 100 என்ற அளவுக்கு இருக்க வேண்டும். 60-க்கும் கீழ் இருந்தால், அந்த குழந்தைகளுக்கு மூச்சுக் குழாய் மூலம் பிறந்த 5 நிமிடத்துக்குள் கிடைக்கச் செய்ய வேண்டும். இதுபோன்ற பிறந்த குழந்தைகளை கண்காணித்து உடனுக்குடன் சிகிச்சை அளிக்க குழந்தைகள் நல மருத்துவர் உடன் இருப்பது மிக அவசியம். குழந்தைகள் நல மருத்துவர்கள் உரிய நேரத்தில் இல்லாமல் இருந்தால், அநேக குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைப்பதில்லை என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT