Published : 30 Oct 2015 09:47 AM
Last Updated : 30 Oct 2015 09:47 AM

கேரளத்து சேட்டன்மாரும், மாட்டுக்கறியும்: உள்ளாட்சித் தேர்தலில் சூடு பிடிக்கும் விவகாரம்

கேரளவாசிகள் பெரும்பாலானவர்கள் மாட்டுக்கறி சாப்பிடும் பழக்கம் உடையவர்கள். காலைப்பொழுதில் ‘கட்டன் சாயா’ எத்தனை முக்கியமோ, அதே அளவுக்கு கேரளத்து சேட்டன்மார்களுக்கு வாரத்துக்கு இரண்டு முறையேனும் மாட்டுக்கறி அவசியம். கோழி, ஆட்டு இறைச்சியைவிட வீடுகளிலும், உணவகங்களிலும் மாட்டுக் கறிக்கே முக்கியத்துவம்.

கேரள மக்களில் பெரும்பாலானோர் அசைவப் பிரியர்கள். காரணம் விலை குறைவு என்பதுதான். கேரள மாநிலத்தில் பெரிய அளவுக்கு மேய்ச்சல் நிலம் இல்லை. இதனால் அங்கு தேவைப்படும் இறைச்சிக்கான மாடுகளில் 95 சதவீதம் தமிழகத்தில் இருந்தே செல்கின்றன.

பிராணிகள் வதை தடுப்பு சங்க கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமணி கூறும் போது, `ஒரு லாரியில் 16 மாடுகள் வரைதான் கொண்டு செல்ல வேண் டும். மாடுகள் ஒன்றோடு ஒன்று உரசக் கூடாது. போதுமான அளவு வைகோல், தண்ணீர் வசதி செய் யப்பட வேண்டும். கால்நடை மருத்துவரிடம் சான்றிதழ் வாங்கி யிருக்க வேண்டும். 10 ஆண்டு களுக்கு மேல் வயதான, கன்று ஈன முடியாத, வேலை செய்ய இயலாத மாடுகளையே அடிமாட்டுக்கு அனுப்ப முடியும்.

ஆனால், ஒரே லாரியில் 40-க் கும் மேற்பட்ட மாடுகளை ஏற்றிச் செல்கின்றனர். ஒரு நாளைக்கு சராசரியாக 800 மாடுகள் கேரளாவில் இறைச்சியாகின்றன. இது இயற்கையின் தன்மையை சிதைத்து விடும். இது தவிர்க்கப்பட வேண்டும்’ என்றார்.

கேரள மாநிலத்தில் வரும் 2 மற்றும் 5-ம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இப்போது மாட்டுக் கறி விவகாரம் இத்தேர்தலை சூடுபறக்கச் செய்துவிட்டது.

கேரளத்தில் எஸ்.என்.டி.பி. என்னும் ஈழவர் சமுதாய அமைப் பைச் சேர்ந்த வெள்ளாப்பள்ளி நடேசன் அண்மையில் பாஜகவோடு கூட்டணி சேர்ந்துள்ளார். இதனால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களுக்கு இணையாக பாஜகவும் உள்ளாட் சித் தேர்தல் களத்தில் சம பலம் பெற்றுள்ளது. பாஜகவின் போட்டியை எதிர்கொள்ள மாட்டுக்கறி அஸ்திரத்தையே கை யில் எடுத்துள்ளனர் இடதுசாரிகள்.

கேரள அரசியல் களம் மாட்டு இறைச்சியை நோக்கி நகர்ந்ததன் அடுத்த கட்டம்தான், டெல்லியில் கேரள பவனில் நடைபெற்ற சோதனை என்கிறார்கள் கேரள அரசியல் நோக்கர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x