Published : 19 May 2014 09:53 AM
Last Updated : 19 May 2014 09:53 AM
மாவோயிஸ்ட் பிரச்சினையை அணுகுவதில் புதிதாக அமையவுள்ள அரசுக்கு பன்மடங்கு முதிர்ச்சி தேவை என்று கருத்து தெரிவித்துள்ளார் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசியப் பொதுச் செயலாளரும் வழக்கறிஞருமான சுரேஷ்.
ஆந்திரா, ஒடிசா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரம் உள்பட இன்னும் சில மாநிலங்களில் மாவோயிஸ்டு கள் ஆதிக்கம் அதிகம் உள்ளன. உள்நாட்டின் முக்கியப் பிரச்சினையாக மாவோயிஸ்டுகள் விவகாரம் உள்ளது. தற்போது புதிய அரசு அமையவிருக்கும் நேரத்தில், அதனிடமிருந்து மாவோயிஸ்டுகளுக்கும், மாவோயிஸ்ட் பகுதி மக்களுக்கும் உள்ள எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும்?
மனித உரிமை மீறல்கள் மற்றும் பிரச்சினைகளுக்காக பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருபவர் சுரேஷ். 2012-ம் ஆண்டில் சத்தீஸ்கர் மாநிலத்தில் காவல்துறையினர் சிலரை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றபோது, அவர்களுடன் பேச்சு நடத்தி கடத்தப்பட்டவர்களை மீட்டு வந்ததில் சுரேஷுக்குப் பெரும் பங்கு உண்டு. நீண்ட காலமாக மாவோயிஸ்ட் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து வரும் அவர், தன் அனுபவத்தின் அடிப்படையில் சில விஷயங்களை 'தி இந்து' வுடன் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:
பொதுவாக, மாவோயிஸ்ட் பிரச்சினை என்பது இரண்டு வகைகளில் பார்க்கப்படுகிறது. ஒன்று, சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினையாக. இரண்டாவது, தேசத் துரோகக் குற்றமாக. இந்தப் பிரச்சினையை ராணுவம் மூலமாகத்தான் முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு.
காங்கிரஸ் ஆட்சியில் உள் துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், மாவோயிஸ்ட்களை ஒழிக்க 'க்ரீன் ஹன்ட்' எனும் 'பச்சை வேட்டை'யை மேற்கொண்டார். ஆனால் அதன் மூலம் மாவோயிஸ்ட்களை முற்றாக ஒழிக்கவும் முடியவில்லை. பிரச்சி னைக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. அந்த 'ஆபரேஷன்' தோல்வியுற்றது.
"இந்தப் பிரச்சினையைக் கையாளுவதில் அரசின் அணுகு முறை மாற வேண்டும். இது சட்ட ஒழுங்குப் பிரச்சினையோ அல்லது தேசத்துரோக குற்றமோ அல்ல. மாறாக இது ஓர் அரசியல் பிரச்சினை. இதற்குத் தீர்வு காண பன்மடங்கு முதிர்ச்சி தேவை. மாவோயிஸ்ட்கள் எதிர்பார்ப்பதும் இதைத்தான். கூட்டணியுடன் இருந் தாலும், தற்போது பா.ஜ.க. பெரும்பான்மையாக இருப்பதால் அவர்களால் யாருடைய இடர்பாடு மின்றி இந்தப் பிரச்சினையில் ராணுவம், காவல்துறை தவிர்த்து மாற்று வழி மூலமாகச் செயலாற்ற இயலும் என்று எதிர்பார்க்கலாம்.
பல காலமாக மாவோயிஸ்ட் பிரச்சினை, மாவோயிஸ்ட் பிரச் சினை என்று கூவி வருவது எல்லாம், மக்கள் பிரச்சினை கள்தான்.
மாவோயிஸ்ட்கள் தங்கள் கையில் எடுத்துக் கொள் ளும் பிரச்சினைகள் எல்லாமே அப்பகுதி ஆதிவாசிகளின் பிரச் சினைகள்தான். மாவோயிஸ்ட்கள் தங்கியிருக்கும் பகுதிகள் எல் லாமே ஆதிவாசி மக்கள் இருக்கும் பகுதிகள்தான். அந்தப் பகுதிகள் யாவும் மலைகள் சூழ்ந்ததாகவும், வனங்கள் கொண்டதாகவும், கனிம வளங்கள் நிறைந்ததாகவும் இருக்கின்றன.
பீடி செய்வதற்கான இலை கள் முதற்கொண்டு வனம் சார்ந்த பயன்கள், வளங்கள் அனைத் தையும் பன்னாட்டு நிறுவனங் களும், பெரு முதலாளிகளும் சுரண்டுகிறார்கள். அந்தப் பகுதி யில் கிடைக்கிற எந்த ஒரு பொருளுக்கும் சரியான விலை நிர்ணயம் செய்யப்படுவதில்லை. வனம் எனும் பொதுச்சொத்தை வெளியில் இருந்துவரும் சிலர் மட்டுமே அனுபவிக்கக் கூடியதாகத் தற்போதையை நிலைமை உள்ளது.
அங்கு மேற்கொள்ளப்படுகிற வளர்ச்சி என்பது, 'அழித்தொழிக் கும் வளர்ச்சி'யாகவே உள்ளது. அந்த வளர்ச்சி மக்களுக்கு எந்த விதத்திலும் பயன்படவில்லை. சாலை என்பது நம்முடைய பார்வையில் வளர்ச்சியாக இருக் கலாம். ஆனால் அப்பகுதியில் உள்ள ஆதிவாசிகளின் பார்வை யில் சாலை என்பது அவர் களின் பொருளைக் கொள்ளைய டிப்பதற்கான வழி என்பதாகத்தான் உள்ளது.
மக்களின் பிரச்சினைகளை தேசநலனுக்கு எதிரான பிரச்சினை களாகப் பார்ப்பதுதான் அரசுகள் செய்யும் தவறு. தங்கள் பிரச்சி னைகளைச் சொல்லும் ஆதிவாசி கள் எல்லாருமே மாவோயிஸ்டுகள் அல்ல என்பதை அரசு முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் மேற்கொண்டிருக்கும் அரசியல் பாதை வேண்டுமானால் தவறாக இருக்கலாம். ஆனால் அவர்கள் முன் வைக்கும் பிரச்சினைகளில் எந்தத் தவறும் இல்லை.
மாவோயிஸ்டுகளால் கடத்தப் பட்ட போலீஸ்காரர்களை மீட்கச் சென்றிருந்த போது அங்கிருந்த ஓர் ஆதிவாசி முதியவர், 'கோழிக்கறியின் விலை மதிப்பு கூட எங்களுக்கு இல்லை' என்றார். நல்லாட்சி, வளர்ச்சி, ஊழலற்ற அரசு என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறி வெற்றி பெற்று தற்போது ஆட்சி அமைக்கவிருக்கிற புதிய அரசு இவர்களின் நிலையை மாற்ற திறந்த மனதோடு முன் வர வேண்டும். அதுதான் மாவோயிஸ்ட் பகுதி மக்களின் எதிர்பார்ப்பும் கூட. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT