Published : 11 Nov 2020 03:17 AM
Last Updated : 11 Nov 2020 03:17 AM
தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிப்பவர்களுக்கு பல்வேறு கட்டுபாடுகளை உணவு பாதுகாப்புத் துறை விதித்துள்ளது.
இதன் அடிப்படையில், திருமண மண்டபம், தனியார் உணவு கூடங்கள் மற்றும் சமூகநலக் கூடங்கள் ஆகியவற்றில் பண்டிகை கால இனிப்பு கார வகைகள் தயாரிப்போர் கண்டிப்பாக உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அங்கு பணியாற்றுபவர்கள் கையுறைகள், தலைக் கவசம், மேலங்கி அணிய வேண்டும்,
இனிப்பு கார வகைகள் தயாரிக்க பயன்படுத்தும் நீரின் தரத்தை அறிய பகுப்பாய்வு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் உபயோகப்படுத்தக் கூடாது.
பேக்கிங் செய்து அனுப்பும்போது உணவுப் பொருளின் பெயர், தயாரிப்பு தேதி, உபயோகப்படுத்தும் காலம், ஆகியவை தெளிவாக அச்சிடப்பட வேண்டும்.
இனிப்பு, கார வகைகள் தரமாக இல்லை என்றால் 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் நுகர்வோர் புகார் தெரிவிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT