Last Updated : 10 Nov, 2020 10:04 PM

 

Published : 10 Nov 2020 10:04 PM
Last Updated : 10 Nov 2020 10:04 PM

தேர்தல் நேரத்தில் மருத்துவமனைகள், விடுதிகளில் தங்குவோருக்கு வாக்குரிமை: இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மதுரை காங்., நிர்வாகி கோரிக்கை மனு   

மதுரை

தேர்தல் நேரத்தில் மருத்துவமனைகள், விடுதிகளில் தங்குவோருக்கு வாக்குரிமை அளிக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மதுரை காங்., நிர்வாகி மனு அனுப்பியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் சி.எம்.சையதுபாபு, இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு அனுப்பிய கடிதம் ஒன்றில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் உள்நோயாளிகளும், அவர்களுக்கு உதவிக்காக இருப்பவர்களும் என, சுமார் 10 கோடிக்கு மேல் இருப்பார்கள்.

இது தவிர, தேர்தல் நேரத்தில் கல்லூரி விடுதிகளிலுள்ள மாணவ, மாணவிகளும் சட்டமன்றம், மக்களவைத் தேர்தல்களில் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது.

வருகிற சட்டமன்ற தேர்தலில் இவர்களின் வாக்குரிமையை நிலைநாட்ட ஏற்பாடு செய்து, ஜனநாயக கடமையை நிறைவேற்றிட வாய்ப்பளிக்கவேண்டும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் பல லட்சம் நோயாளிகள், மாணவர் கள் தங்களின் வாக்குரிமை பதிவு செய்ய முடியாமல் உள்ளனர். 100 சதவீத வாக்குரிமையை நிறைவேற்ற தேவையான நடவடிக் கை எடுக்கும், தேர்தல் ஆணையம், வாக்களிக்க முடியாத சூழலிலுள்ள நோயாளிகள், மாணவர்களை தேர்தலில் வாக்களிக்க நட வடிக்கை எடுக்கவேண்டும்.

ஒருசில வாக்கு கூட, வேட்பாளரின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கிறது. குறிப்பாக சிறைக் கைதிகள், திருநங்கைகள் போன்றோருக்கு வாக்குரிமை கொடுக்கப்படுகிறது.

அரசுத்துறைகளில் பணிபுரிவோரும் தபால் மூலம் வாக்கைப் பதிவு செய்கின்றனர். அந்த வரிசையில் தேர்தல் நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள், விடுதிகளில் தங்கியுள்ள மாணவ வாக்காளர்களையும் அந்தந்த மாநில தேர்தல் அதிகாரிகள் மூலம் தபால் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x