Published : 10 Nov 2020 06:16 PM
Last Updated : 10 Nov 2020 06:16 PM
டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் கேட்டு மதுரையில் பாரதீய டாஸ்மாக் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரை மண்டல டாஸ்மாக் அலுவலகம் முன்பு தமிழக பாரதீய டாஸ்மாக் தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பிஎம்எஸ் மாநில செயல் தலைவர் சுடலைமுத்து தலைமை வகித்தார்.
மாநில செயலர் முத்தராமலிங்கம், மதுரை மாவட்ட தலைவர் மாரிமுத்து, மாவட்ட செயல் தலைவர் ஜனார்த்தனன். செயலர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிஎம்எஸ் நிர்வாகிகள் கூறுகையில், டாஸ்மாக் பணியாளர்களுக்க 20 சதவீத போனஸ், 10 சதவீத கருணை தொகை வழங்க வேண்டும், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்குவதுடன் பணி விதிகளையும் உருவாக்க வேண்டும், காலி அட்டைப் பெட்டிகளை நிர்வாகமே திரும்பப் பெற வேண்டும், டாஸ்மாக் துறையில் காலியாக உள்ள 923 இளநிலை உதவியாளர் பணியிடங்களில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு சிறப்புத் தேர்வு நடத்தி 500 இளநிலை உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 423 இளநிலை உதவியாளர் பணியிடங்களையும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு புதிதாக சிறப்புத் தேர்வு நடத்தி நிரப்ப வேண்டும்.
அரசுத் துறைகளில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், ஒட்டுநர்கள், இரவு காவலர்கள், ஆவண எழுத்தர், இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களை டாஸ்மாக் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
ஆசிரியர் படிப்பு முடித்த டாஸ்மாக் பணியாளர்களை சிறப்பு தேர்வு நடத்தி ஆசிரியர் பணி வழங்க வேண்டும். பணியின் போது இறக்கும் டாஸ்மாக் பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை வேலை வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற டாஸ்மாக் பணியாளர்களுக்கு கடைசியாக பெற்ற 50 சதவீத ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT