Published : 10 Nov 2020 02:29 PM
Last Updated : 10 Nov 2020 02:29 PM
மதுரை மாவட்ட மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தந்த ஒரே அரசு அதிமுக அரசு என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறினார்.
திருமங்கலம் தொகுதியில் உள்ள பொதுமக்களுக்கு முகக்கவசம், கிருமி நாசினி உள்ளிட்டவற்றை கழக அம்மா பேரவை சார்பில் கழக அம்மா பேரவை செயலாளரும். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும். அமைச்சருமான ஆர்பிஉதயகுமார் வழங்கினார்.
அதன்பின்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மீனாட்சி அம்மன் குடி கொண்டிருக்கும், முத்தமிழ் வளர்த்த இந்த மதுரை மாவட்டத்திற்கு அதிமுக அரசு கிள்ளி கொடுத்தால் போதாது என்று பல்வேறு திட்டங்களை அள்ளி அள்ளிக் கொடுத்து வருகிறது
ரூ.1000 கோடியில் மதுரையை எழில்மிகு நகரமாக உருவாக்கிட ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது ,அதேபோல் 30 கோடி மதிப்பில் புதிய ஆட்சியர் அலுவகம் கட்டப்பட்டு வருகிறது, மேலும் ரூ.1,200 கோடி மதிப்பில் லோயர் கேம்ப் பகுதியில் இருந்து குழாய் மூலம் மதுரை மாநகராட்சியில்உள்ள 100 வார்டுகளில் 60 ஆண்டிற்கு குடிநீர் பஞ்சம் வராத வகையில் திட்டப்பணிகள் செயல்படுத்தப்படுகிறது, அதுமட்டுமல்லாது 1000 கோடியில் நத்தம் சாலையில் பறக்கும் சாலை அமைக்கப்பட்டு வருகிறது
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு போக்குவரத்தை எளிதாக வண்ணம் பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள உயர்மட்ட பாலத்தை அதிமுக உருவாக்கி கொடுத்தார் அதனை தொடர்ந்து வைகை ஆற்றின் குறுக்கே புரட்சித்தலைவர் பெயரிலும், புரட்சித்தலைவி அம்மா பெயரிலும் இரண்டு உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது,
மாட்டுத்தாவணியில் இருந்து கூடல் நகர் வரை ரூ.50 கோடியில் சாலைகள், ரூ.380 கோடி மதிப்பில் வைகையின் கரையோரத்தில் பாலங்கள், வைகை ஆற்றின் குறுக்கே 2 தடுப்பணைகள் அதுமட்டுமல்லாது மதுரை மாவட்டத்தில் நிலத்தடி நீரை உயர்த்த குடிமராமத்து திட்டத்தின் மூலம் பல்வேறு திட்டப்பணிகள் தற்போது கூட மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகம் நீர் மேலாண்மையில் மதுரை மாநகராட்சியை பாராட்டி உள்ளது
அதேபோல் காளவாசல் பகுதியில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது தற்போது பிசி பெருங்காயம் கம்பெனி அருகே உயர்மட்ட மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறதுகுருவிக்காரன் சாலையில் உயர்மட்ட பால பணிகள் நடைபெற்று வருகிறது.
மதுரை மாவட்ட மக்களுக்காக முதல்வர் செய்த பல்வேறு திட்டங்களை சொல்ல ஒரு நாள் போதாது இதையெல்லாம் ஸ்டாலின் கருத்தில் கொள்ளாமல் காணொளி காட்சி மூலம் பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்
எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் அதிலும் குறிப்பாக தென் மாவட்ட தலைநகராக விளங்கும் மதுரை மாவட்டத்திற்கு உருவாக்கிக் கொடுத்து கடந்த 2019-ம் ஆண்டு பாரத பிரதமர் மூலம் முதல்வர் அடிக்கல் நாட்ட வைத்தார்
இதற்காக தமிழக அரசின் சார்பில் 201 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் ரூ.21 கோடி அளவில் சாலை வசதி, உள்கட்டமைப்பு வசதி போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
திமுக மத்திய அமைச்சரவையில் இருந்த பொழுது எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து ஒரு குரல் கூட கொடுக்கவில்லை. தென் மாவட்ட மக்களின் ஜீவாதார பிரச்சினையான முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் தமிழக உரிமையை பறிகொடுத்து திமுக.
முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை புரட்சித்தலைவி அம்மா நடத்தியபோது அப்போது 19 கொலை மிரட்டலை அம்மாவிற்கு விட்டனர் அதையெல்லாம் துச்சமென மதித்து நிச்சயம் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக் காட்டுவேன் என்று கூறினார் அதன்படி இன்றைக்கு முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியாக அம்மா உயர்த்தித் தந்துள்ளார்
இதே முல்லைப்பெரியார் பிரச்சினையில் அப்போதிருந்த காங்கிரஸ் அரசைக் கண்டித்து கருணாநிதி உண்ணாவிரதம் என்றார் அதன்பின் கண்டன ஆர்ப்பாட்டம் என்றார் அது இரண்டும் அவர் நடத்தவில்லை என்று தென்மாவட்ட மக்களுக்கு நன்றாக தெரியும்
2006 ஆண்டு ஜுன்16ம் தேதி ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்து மதுரைக்கு வந்த பொழுது அவரை மர்மநபர் கத்தியால் தாக்க முயற்சித்தார். அதன்பின் திமுக ஆட்சிக்காலத்தில் மதுரைக்கு வர பயந்தவர் தான் இந்த ஸ்டாலின்.
அதன்பின் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டாலின் சுதந்திரமாக எந்தவித பயமும் இல்லாமல் இன்று வரை வந்து செல்கிறார் என்பதை ஸ்டாலின் மறக்கமாட்டார் என்பதை நினைவூட்டுகிறேன்
அதேபோல் 7.3.2007 ஆம் ஆண்டு திமுக வாரிசு சண்டைக்காக மதுரையில் உள்ள தினகரன் பத்திரிக்கை எடுக்கப்பட்டு அதில் மூன்று அப்பாவிகள் உயிர் பலியாகினர்.
அதுமட்டுமில்லாது 25.5.2003 ஆம் ஆண்டு இதே மதுரையில்தான் திமுக உட்கட்சி பூசல்காக முன்னாள் அமைச்சர் தா கிருஷ்ணன் நடுரோட்டில் வெட்டி படுகொலை சம்பவம் நடைபெற்றது
2006 முதல் 2011 வரை மதுரை மாநகராட்சியில் பல்வேறு நிர்வாக சீர்கேடு நடைபெற்றது. அதனை சீர்செய்ய 2012-ம் ஆண்டு ஜெயலலிதா மதுரை மாநகராட்சிக்கு 250 கோடியை சிறப்பு நிதியாக வழங்கினார்
அதுமட்டுமல்லாது தென் மாவட்ட மக்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு உரிமையை அப்போதிருந்த திமுக காங்கிரஸ்
கூட்டணி ஆட்சியில் பறிபோயின அந்த ஜல்லிக்கட்டை மீண்டும் மத்திய அரசிடம் வலியுறுத்தி போராடி மீட்டுத் தந்தது அம்மாவின் அரசாகும்
திமுக ஆட்சி காலத்தில் இரண்டு ஏக்கர் நிலம் தருவோம் என்று கூறினார்கள் மதுரை மாவட்ட மக்களுக்கு ஏதாவது ஒரு நபருக்கு கூட இரண்டு ஏக்கர் நிலம் கொடுத்ததுண்டா
திமுக ஆட்சி காலத்தில் கோயில் மாநகரமாக இருந்த மதுரையை கொடியவர்களின் கூடாரமாக இருந்ததை மக்கள் இன்னும் மறக்கவில்லை ஆகவே இன்றைக்கு உலகமே கரோனா தொற்று நோயினால் மிரண்டு வரும் நிலையில் தமிழகத்தில் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கட்டுப்படுத்தி நோயில் இருந்து மக்களைக் காத்திட முதல்வருக்கும், அவருக்கு உறுதுணையாக இருக்கும் துணை முதல்வருக்கும் மதுரை மக்கள் என்றைக்கும் உறுதுணையாக இருப்பார்கள்.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மதுரையில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும் திமுக தோற்கும் அந்தத் தீர்ப்பினை மக்கள் வழங்குவார்கள் என்று கூறினார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT