Published : 10 Nov 2020 03:12 AM
Last Updated : 10 Nov 2020 03:12 AM
தீபாவளி போனஸ் 20 சதவீதம் வழங்கக் கோரி, அரசுப் போக் குவரத்துக் கழகத் தொழிலா ளர்கள் மதுரையில் உள்ள போக்குவரத்துத் தலைமை அலு வலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கரோனாவைக் காரணம் காட்டி அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு இந்தாண்டு பத்து சதவீத தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டது. இதற்குப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். 20 சதவீத போனஸ் கேட்டு, மாநிலம் முழு வதும் நேற்று அரசுப் போக் குவரத்துக் கழகத் தலைமை அலு வலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள மதுரை கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகத்தில் தொமுச பொதுச்செயலர் அல்போன்ஸ் தலைமையில் அனைத்துத் தொழிற்சங்கங்களைச் சேர்ந்தோர் முற்றுகையிட்டனர்.
சிஐடியூ பொதுச் செயலர் கனக சுந்தர், ஏஐடியூசி பொதுச் செயலர் நந்தாசிங், பணியாளர் சம்மேளன மாநிலத் துணைத் தலைவர் எஸ்.சம்பத், எச்எம்எஸ் பொதுச் செயலர் ஷாஜகான், ஏஏஎல்எல்எப் சங்கத்தைச் சேர்ந்த சங்கையா, பார்வர்டு பிளாக் செல்வம் உள் ளிட்டோர் முற்றுகைப் போராட்டத் தில் பங்கேற்றனர்.
விருதுநகர்
விருதுநகரில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகப் பணி மனையை போக்குவரத்துத் தொழி லாளர்கள் நேற்று முற்றுகையிட் டனர். இதற்கு போக்குவரத்து தொழிலாளர் முன்னேற்றச் சங்க மாவட்டக் கவுன்சில் தலைவர் மாடசாமி தலைமை வகித்தார். சிஐடியூ நிர்வாகி வெள்ளத்துரை முன்னிலை வகித்தார்.
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் உள்ள மண் டல அரசு போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகம் முன் போக்குவரத்துத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம் நடை பெற்றது.
காரைக்குடி அரசு போக்கு வரத்துக் கழக மண்டல அலுவ லகத்தை தொழிலாளர்கள் முற்று கையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT