Published : 09 Nov 2020 03:11 AM
Last Updated : 09 Nov 2020 03:11 AM
சிவகாசியில் பட்டாசு விற்பனை விடுமுறை நாளான நேற்றும், நேற்று முன்தினமும் விறுவிறுப்படைந்தது.
தீபாவளியையொட்டி விருதுநகர் மவாட்டத்தில் சுமார் 850 பட்டாசுகுடோன்களும், சுமார் 2 ஆயிரம் பட்டாசு கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகள் சார்பிலும் பல இடங்களில் நேரடி விற்பனை மையங்களும் திறக்கப்பட்டுஉள்ளன. இங்கு 20 முதல் 60 சதவீதம் தள்ளுபடியில் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
தீபாவளிப் பண்டிகை நெருங்கிவிட்டதால் பட்டாசுகளை வெளியூர்களுக்கு அனுப்பும் பணி சிவகாசியில் மும்முரமாக நடைபெறுகிறது. பேருந்துகள், ரயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பட்டாசு வாங்குவதற்காக விருதுநகர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வாகனங்களில் சிவகாசிக்கு வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வியாபாரிகள்.
நேற்றும், நேற்று முன்தினமும் விடுமுறை நாட்கள் என்பதால் சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பட்டாசுக் கடைகளில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. இது குறித்து பட்டாசு விற்பனையாளர்கள் கூறியதாவது: இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி குறைந்ததால் எதிர்பார்த்து வந்த பட்டாசு ரகங்கள் கிடைக்காமல் பலர் ஏமாற்றம் அடைந்தனர். வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வாகனங்களில் வந்து பட்டாசு வாங்கிச் செல்கின்றனர். இருப்பினும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விற்பனை சற்று குறைவுதான் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT