Published : 08 Nov 2020 05:47 PM
Last Updated : 08 Nov 2020 05:47 PM

தீபாவளிப் பண்டிகை; கும்பகோணம் கோட்டம் சார்பில் பல்வேறு ஊர்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சார்பில் பல்வேறு ஊர்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இது தொடர்பாக இன்று (நவ. 08) வெளியிடப்பட்டுள்ள தகவல் அறிக்கை:

"தீபாவளிப் பண்டிகையையொட்டி பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமமும், இடையூறும் இன்றி பயணம் செய்ய ஏதுவாகச் சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால் வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய ஊர்களுக்கு நவம்பர் 11ஆம் தேதியிலிருந்து 13ஆம் தேதி வரையிலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும், திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய ஊர்களுக்கும், மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்துக் கழக இயக்கப் பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் நவம்பர் 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும், சென்னையிலிருந்து பொதுமக்கள் எளிதாக வெளியூர்களுக்குப் பயணம் செய்யும் வகையில், தற்காலிகப் பேருந்து நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு தடப் பேருந்துகள், தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.

கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் தடப் பேருந்துகள் கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளன.

தீபாவளி முடிந்து மீண்டும் பொதுமக்கள் ஊர்களுக்குச் செல்ல நவம்பர் 14ஆம் தேதியிலிருந்து 17ஆம் தேதி வரையில் சிறப்புப் பேருந்துகளை இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது".

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x