Published : 27 Oct 2015 10:00 AM
Last Updated : 27 Oct 2015 10:00 AM
திருவள்ளூர் ஒன்றியத்துக்குட் பட்டது பாக்கம் ஊராட்சி. 9 வார்டுகளை கொண்ட இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஸ்ரீபதி நகர் இருளர் காலனியில் 20-க்கும் மேற்பட்ட இருளர் இன குடும்பங் களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற் பட்டோர் குடிசை போட்டு வசிக் கின்றனர். இந்த குடியிருப்புகளுக்கு இதுவரை மின்சாரம் மற்றும் சாலை வசதி செய்து தரப்படவில்லை.
இதுகுறித்து, இருளர் இன மக்கள் கூறியதாவது: பாக்கம் கிராமத்தில் பல தலைமுறைகளாக வசித்து வருகிறோம். பாம்பு பிடித்தல், விவசாய கூலி வேலை உள்ளிட்ட பணிக ளில் ஈடுபட்டு வரும் நாங்கள் பல தலைமுறைகளாக, பாக்கம் கிராமத்தில் உள்ள செல்வந் தர் வீடுகளின் பின்புற தோட்டப் பகுதிகளில் தங்கி அவர்களின் வீட்டு வேலைகளை செய்து கொண்டு கொத்தடிமைகள் போல் வாழந்து வந்தோம்.
இந்நிலையில் கடந்த 35 ஆண்டு களுக்கு முன்பு இருந்த ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக் கையின் விளைவாக, வருவாய்த் துறை அதிகாரிகள் இருளர் இன மக்களுக்காக களத்துமேடு புறம் போக்கு நிலத்தை குடியிருப்ப தற்காக ஒதுக்கின.
இருப்பினும் பாக்கத்தின் மற் றொரு பகுதியான பதி நகரின் களத்து புறம்போக்கு பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக குடிசைகள் போட்டு வசித்து வந்தோம். மின்சார வசதியோ சாலை வசதியோ செய்து தரப்படவில்லை.
இந்நிலையில், நாங்கள் வசித்த அந்த பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல் படுத்த ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. ஆகவே ஏற் கெனவே ஊராட்சி நிர்வாகம் ஒதுக்கிய இடத்தில் கடந்த 6 மாதங் களுக்கு முன்பு குடிசை போட்டு குடியேறினோம். மின்சார வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி கள் செய்துத்தரப்படும் என இங்கு எங்களை குடியமர்த்திய வரு வாய்த் துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் உறுதியளித்தது. ஆனால், ஒன்றும் நடக்கவில்லை.
புதர் மண்டிக் கிடந்த இடத்தை நாங்களே செலவு செய்து சமன் படுத்திக் கொண்டோம். குடிநீருக் கான இணைப்பு குழாய்கள் அமைக்கும் பணியினையும் நாங் களே மேற்கொண்டோம். குடிநீரை மட்டுமே ஊராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது. ஆனால், மின்சார வசதியினையும், சாலை வசதிகளையும் ஊராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி தரவில்லை.
குடியிருப்புகளுக்கு அருகே உள்ள புதர் பகுதிகளில் இருந்து வரும் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும், இருளர் காலனியில் உள்ள 15-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாடங்களை படிக்க முடியாமல் தவிக்கின்றனர். இதனால், மின்சார வசதிக்காக 10, 12-ம் வகுப்புகள் மற்றும் கல்லூரி படிப்புகள் படிக்கும் மாணவர்களின் குடும்பங்கள் மீண்டும் பாக்கம் பகுதியில் உள்ள செல்வந்தர் வீடுகளின் பின்புற தோட்டங்களில் தங்கி கொத்தடிமை வாழ்க்கை வாழ்கின்றனர்.
வீடுகளுக்கு மின் இணைப்புக்கு தேவையான வீட்டு வரி ரசீது அளிக் குமாறு பல முறை கோரிக்கை வைத்தும், பாக்கம் ஊராட்சி நிர்வாகம் இழுத்தடித்து வந்தது. இந்நிலையில் இதுகுறித்து ‘தி இந்து’ செய்தி சேகரித்ததை அறிந்து தற்போது வீட்டு வரி ரசீதை ஊராட்சி நிர்வாகம் அளித்துள்ளது.
இதையடுத்து வருவாய்த் துறை அதிகாரிகள் தடையில்லா சான் றிதழ் அளித்தால்தான் மின்சார வாரியம் இருளர் காலனிக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணியை தொடங்கும். எனவே வரு வாய்த்துறை அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும். தெரு விளக்கு, சாலை வசதியையும் ஊராட்சி ஏற்படுத்தித் தர வேண் டும். இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.
இருளர் காலனி வாசிகளின் குற்றச்சாட்டு குறித்து, பாக்கம் ஊராட்சி தலைவர் மஞ்சு அருள் தாஸ் கூறும்போது, ‘ஊராட்சி நிர் வாகத்திடம் போதிய நிதி இல்லை. ஆகவே, இருளர் காலனி பகுதியில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கொஞ்ச கொஞ்சமாகதான் செய்துதர முடியும். புறம்போக்கு நிலத்தில் உள்ள குடியிருப்புகளுக்கு, வீட்டு வரி ரசீது அளிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்தன. அவைகள் சரி செய்யப்பட்டு தற்போது வீட்டுவரி ரசீது அளித்துள்ளோம்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT