Published : 08 Nov 2020 03:13 AM
Last Updated : 08 Nov 2020 03:13 AM
காய்கறி சாகுபடி செய்யும் விவ சாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என வந்தவாசி வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் வளர்மதி தெரி வித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், “குறைந்த நாட்களில் அதிக வருமானம் தரக்கூடிய பயிர்களாக காய்கறி பயிர்கள் உள்ளன. விவசாயிகள், காய்கறி சாகுபடி செய்வதற்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க தோட்டக்கலைத் துறை தயாராக உள்ளது.
இதற்காக, மிக குறைந்த நீர் ஆதாரம் கொண்ட இடங்களில் தேவையான நீராதாரம் ஏற் படுத்தவும் மற்றும் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்கவும் தோட்டக் கலைத்துறை சார்பில் 1 ஹெக் டேருக்கு ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். காய் கறிகள் பயிரிடுவதற்கான விதை களும் மானிய விலையில் வழங் கப்படும்.
மேலும், கத்திரி, மிளகாய், தக்காளி, பீர்க்கை, வெண்டை, பாகற்காய், புடலை, வெள்ளரி, பூசணி, தர்பூசணி, பரங்கி, சுரை போன்ற காய்கறிகளை பயிரிடும் விவசாயிகளுக்கு 1 ஹெக்டேருக்கு ரூ.2,500 ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.
இயற்கை முறையில் நஞ்சு இல்லாத காய்கறி உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஏற்றுமதி அடையாள சான்றும், 1 ஹெக்டேருக்கு ரூ.3,700 முதல் ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும். தை மாத பருவத்தில் காய்கறி நடவு செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு வந்தவாசி வட்டார தோட்டக் கலைத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள லாம்” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT