Published : 04 Oct 2015 01:13 PM
Last Updated : 04 Oct 2015 01:13 PM

ஹார்மோன் குறைபாட்டால் குள்ளமாகும் சிறுவன்: சிகிச்சைக்கு ஊசி வாங்க முடியாமல் பெற்றோர் தவிப்பு

மதுரையில் ஹார்மோன் குறைபாட் டால் வளர்ச்சி அடையாமல் குள்ளமாகும் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க ஒரு ஊசியின் விலையே ரூ. 13 ஆயிரம் என்பதால் வாங்க முடியாமல் பெற்றோர் தவித்து வருகின்றனர்.

மதுரை பொன்மேனி பகுதி யைச் சேர்ந்தவர் நீதிராஜன். எலக்ட் ரீசியன். இவரது மனைவி நந்தினி. இவர்களுக்கு ஏஞ்சல் (7), ஷாம் பால் (5) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இதில் மற்ற குழந்தைகளை ஒப்பிடும்போது ஷாம்பால் வளர்ச்சி குறைவாக இருப்பதாக அண்டை வீட்டார் நந்தினியிடம் அடிக்கடி கூறி யுள்ளனர். ஆரம்பத்தில் இதை கண்டுகொள்ளாமல் இருந்த பெற் றோர், அதன்பின் ஷாம்பாலின் உயரம் வயதுக்கு ஏற்றவாறு இல் லாமல் குள்ளமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள், ஷாம் பாலை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் சேர்த்தனர். சிறுவனைப் பரிசோதித்த அகச் சுரப்பியல் துறை மருத்துவர்கள், சிறுவனுக்கு ஹார்மோன் குறைபாட்டால் வளர்ச்சிக் குறைபாடு பாதிப்பு இருப்பதைக் கண்டறிந்தனர்.

இந்த குறைபாட்டைப் போக்கி வளர்ச்சியை அதிகரிக்க, தொடர்ந்து 4 மாதங்களுக்கு 4 ஹார்மோன் ஊசி போட வேண்டும். ஒரு ஊசியின் விலை ரூ. 13,104. இந்த ஊசி மருத்துவமனையில் இல்லாததால், முதல்வரின் மருத்துவக் காப்பிட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெற விண்ணப்பிக்கும்படி, ஷாம்பாலின் பெற்றோரிடம் மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

இதையடுத்து, முதல்வர் காப் பீட்டுத் திட்டத்தில் மகன் ஷாம் பால் சிகிச்சைக்கு நீதிராஜன் விண் ணப்பித்துள்ளார். முதற்கட்டமாக, இந்தத் திட்டத்தில் ஊசி வாங்க நிதி ஒதுக்கப்பட்டதால், மருத்துவர்கள் சிகிச்சையைத் தொடங்கி உள்ள னர். ஆனால், ஒருமுறை மட் டுமே, இந்த ஊசிக்கான நிதி வழங் கப்பட்டுள்ளது. அதன்பின், ஊசி வாங்க காப்பீட்டு திட்டத்தில் நிதி வரவில்லை என மருத்துவமனை நிர்வாகம் கைவிரித்து விட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர், மருத்துவ மனைக்கு தினமும் அலைந்து சிகிச்சை அளித்த மருத்துவர், மருத் துவமனை டீன், மருத்துவமனை நிலைய அலுவலர் ஆகியோரை சந்தித்து மகனுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யும்படி வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் நட வடிக்கை எடுக்காததால், கடந்த 2 மாதங்களாக சிறுவனுக்கு சிகிச்சை பெற முடியாமல் பெற்றோர் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து சிறுவனின் தந்தை நீதிராஜன் ‘தி இந்து’விடம் கூறு கையில், ‘‘சிகிச்சையை நிறுத்தா மல் தொடர்ந்து இந்த ஊசியைப் போட்டால் மட்டுமே வளர்ச்சிக் குறைபாட்டை போக்க முடியும். இப்போது, இவர்களே நிதியில்லை, நாங்கள் என்ன செய்வோம் என்கின்றனர்.

முதல்வரின் தனிப் பிரிவுக்கு மனு அளித்துள்ளேன். எனது குழந்தையின் வளர்ச்சி நின்றால், அவன் குள்ளமாகி எதிர்காலமே பாதிக்கப்படும்’’ என்றார்.

சிறுவனின் சிகிச்சை அரசு செயலர் கையில்

சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இதுகுறித்து கூறுகையில், ‘‘சிறுவனின் பெற்றோர், சுகாதாரத்துறை செயலரிடம் விண்ணப்பித்து, அதற்கான நிதி ஒதுக்கப்பட்டால்தான் சிகிச்சையை தொடர முடியும்’’ என்றனர்.

மருத்துவமனை டீன் ரேவதியிடம் கேட்டபோது, ‘‘அந்த சிறுவனின் சிகிச்சைக்கான ஊசி வாங்க பொது நிதியில் நிதி ஆதாரம் இல்லை’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x