Published : 01 Nov 2020 03:13 AM
Last Updated : 01 Nov 2020 03:13 AM
கோவை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 1,500-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. தனியாரின் கட்டுப்பாட்டின் கீழ் 600-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு மீண்டும் அக்டோபர் 1-ம் தேதி முதல் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். முகக்கவசம் அணிதல், தனி நபர் இடைவெளி உள்ளிட்ட நோய் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. விபூதி உள்ளிட்ட பிரசாதங்கள் கைகளில் வழங்காமல், பேப்பரில் போட்டு வைக்கப்பட்டுள்ளது. தீர்த்தம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவையில் சில கோயில்களில் தீர்த்தம் வழங்குவதற்கு என பிரத்யேக இயந்திரம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பீளமேட்டில் உள்ள பழமைவாய்ந்த ஆதி விநாயகர், முருகன் கோயிலில் இயந்திரம் மூலம் தீர்த்தம் வழங்கப்படுகிறது. இது பக்தர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதுதொடர்பாக கோயில் நிர்வாகிகள் கூறும் போது, ‘‘பெங்களூரில் தயாரிக் கப்பட்ட இந்த இயந்திரம் பக்தர்களால் வழங்கப்பட்டது. இந்த இயந்திரத்தின் பக்கவாட்டில் உள்ளகதவை திறந்து, உள்ளே தீர்த்தம்நிரப்பிய பாத்திரம் வைக்கப்பட்டுள் ளது. இயந்திரத்தின் குழாய் பகுதியில் கையை நீட்டினால் சென்சார் மூலம் குறிப்பிட்ட அளவுக்கு தீர்த்தம் கையில் தானாக கொட்டும். மின்சாரம் மூலமும், பேட்டரி மூலமும் இயங்கும் இந்த இயந்திரம் கடந்த 30-ம் தேதி முதல் பயன்படுத்தப்படுகிறது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT