Published : 16 Oct 2015 07:36 AM
Last Updated : 16 Oct 2015 07:36 AM
காவல்துறையில் பல்வேறு சிறப்பு பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட காலத்துக்குப் பின்னரும் தொடர்ந்து பணியாற்றுவர்களை வேறு பிரிவுக்கு மாற்றும்படி டிஜிபி உத்தரவு பிறப்பித் துள்ளதையடுத்து கணக்கெடுக் கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக காவல்துறையில் சட்டம்- ஒழுங்கு, குற்றம், போக்குவரத்து, புலனாய்வு, ஆவணக் காப்பகம் என பல்வேறு பிரிவுகள் உள் ளன. ஒவ்வொரு பிரிவிலும் அதிக பட்சம் இத்தனை ஆண்டுகள்தான் பணியாற்ற வேண்டும் என அரசு ஏற்கெனவே உத்தரவு பிறப்பித் துள்ளது.
ஆனாலும் பல சமயங் களில் இந்த உத்தரவு முறையாக செயல்படுத்தப்படுவதில்லை. அதிகாரம், செல்வாக்கு, விருப் பம். உடல்நிலை என பல்வேறு காரணங்களால் அனுமதிக்கப்பட்ட காலத்தைக் கடந்தும் பலர் ஒரே பிரிவில் பணியாற்றி வருகின் றனர்.
இந்நிலையில் தமிழக டிஜிபி அசோக்குமார், அனைத்து துறை தலைமை அலுவலகங்களுக்கும் உத்தரவு ஒன்றை அனுப்பியுள்ளார். இதில், அனுமதிக்கப்பட்ட காலத் துக்கும் மேல் ஒரே பிரிவில் பணி யாற்றுவோரை வேறு பிரிவுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்துள்ளார்.
பிரிவு வாரியாக பணியாற்ற அனுமதிக்கப்பட்ட ஆண்டுகள் விவரம்: உணவு கடத்தல் தடுப்பு பிரிவு- 2 ஆண்டுகள், போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு- 2, கள்ளச் சாராய தடுப்பு பிரிவு- 2, கூட்டுறவு குற்றப் புலனாய்வுப் பிரிவு- 3 ஆண்டுகள்.
பொருளாதார குற்றப்பிரிவு- 3, சிலை கடத்தல் தடுப்பு புலனாய்வு பிரிவு- 3 முதல் 5 ஆண்டுகள், கமாண்டோ படைப் பிரிவு- அதிக பட்சம் 5 ஆண்டுகள், உளவுப் பிரிவு, கியூ பிரிவு, ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு, பாதுகாப்புப் பிரிவு -7, குற்ற ஆவணக் காப்பகம், சிபிசிஐடி, சிறப்பு பாதுகாப்பு படை, லஞ்ச ஒழிப்பு பிரிவு- 5, சீருடைப் பணியாளர் தேர்வு, பயிற்சி பள்ளிகள் உள்ளிட்ட இதர பிரிவுகள்- 3 ஆண்டுகள் என டிஜிபி உத்தரவில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை காவல் துறை அதிகாரி ஒருவர் நேற்று கூறும்போது, ‘தொடர்ந்து அதே பிரிவில் பணியாற்றுவோர் குறித்த கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. டிஜிபியின் உத்தரவை முழுமையாக அமல்படுத்தினால் பல ஆயிரம் போலீஸார் வேறு பிரிவுகளுக்கு மாறுதல் பெறுவர்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT